Aran Sei

‘அதிக பெண் ஊழியர்களைக் கொண்ட பள்ளிகளில் அதிக சண்டைகள் ஏற்படுகின்றன’ – ராஜஸ்தான் கல்வி அமைச்சர்

திக பெண் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்ட பள்ளிகளில் அதிக சண்டைகளைக் காண முடிகின்றன என்று ராஜஸ்தான் மாநிலக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங், அக்டோபர் 11 ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச பெண் குழந்தை நாள் குறித்த நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியுள்ளார்.

‘வாட்சப் குழுவில் இருந்ததற்காக டெல்லி கலவர வழக்கில் குற்றவாளியாக்குகிறது காவல்துறை’ – உமர் காலித் குற்றச்சாட்டு

”பெண் ஆசிரியர்கள் அதிகமாக இருக்கும் பள்ளியில்தான் சண்டை நடைபெறுகிறது. தாமதமாக வந்தாலோ அல்லது சீக்கிரமாக வந்ததால் கூட பூசல்கள் நடைபெறுகின்றன. இதை நான் ஒரு துறையின் தலைவராக இருந்து பார்த்துள்ளேன்” என்று கோவிந்த் சிங் கூறியுள்ளார்.

”இந்தச் சிறிய விஷயங்களை நீங்கள் சரிசெய்தால், நீங்கள் எப்போதும் ஆண்களைவிட முன்னேறுவீர்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராஜஸ்தான் நிர்வாக சேவைகளுக்கு (ஆர்ஏஎஸ்) தனது மருமகளின் சகோதரி மற்றும் சகோதரரைத் தேர்ந்தெடுப்பதற்காக தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்தினார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அக்குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தேர்வுகள் வெளிப்படையாக நடத்தப்பட்டதாக கூறியிருந்தார்.

‘இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரே மூதாதையர்கள்தான்’ – மோகன் பகவத்

அண்மையில், கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் , நவீன இந்திய பெண்கள் தனிமையில் இருக்க விரும்புகிறார்கள். திருமணத்திற்கு பிறகும் குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை, வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்