ஆதிக்க சாதியினர் தங்களைத் தொடர்ந்து தாக்குவதாகவும், 6 மாதத்திற்கொரு முறை பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தேனி மாவட்டம் டோம்புச்சேரி கிராமத்தில் நடந்து வருவதாகவும் மதம் மாறிய பட்டியல் சாதியினர் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் டோம்புச்சேரியில் வாழும் 8 பட்டியல் சாதி குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் ஆதிக்க சாதியினரின் கொடுமையினால் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.
போடிநாயக்கனூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் உள்ளார்.
கடந்தாண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டதாகவும், இரு சக்கர வாகனம் வாங்கிய போது மிக மோசமான முறையில் தாக்கப்பட்டதாக இஸ்லாம் மதத்திற்கு மாறிய இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
Source : Dt next
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.