Aran Sei

திரையரங்குகள் 50 சதவீத இருக்கையுடன் செயல்பட வேண்டும் – உயர் நீதிமன்றம்

Image Credits: The News Minute

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம், வரும் 11-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மதுரை அண்ணாநகரைச் வழக்கறிஞர் முத்துக்குமார், பழைய குயவர்பாளையத்தை போனிபாஸ், திருச்செந்தூர் ராம்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் 15 முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது திரையரங்குகள் 50 சதவீத இருக்கையுடன் செயல்படுகின்றன. இதனிடையே நூறு சதவீத இருக்கைகளுடன் திரையங்குகள் செயல்படத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

‘மாஸ்டர்’ படம் வெளியாகுமா? – திரையரங்குகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியில் சிக்கல்

“உருமாறிய கொரோனா பரவி வரும் சூழலில் நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட்டால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும். எனவே, நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர்மதுரம், ராம்சுந்தர் ஆகியோர் ஆஜராகியுள்ளார். அவர்கள், ”மத்தியப் பேரிடர் மேலாண்மைத் துறை விதிமுறைகளுக்கு எதிராக மாநில அரசு, திரையரங்குகள் நூறு சதவீத இருக்கையுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா ஆபத்தை மேலும் அதிகரிக்கும்” என்று வாத்திட்டுள்ளனர்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு : பெண் கவிஞருக்கு குவியும் பாராட்டு

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விக்டோரியா கவுரி, “திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படுவதற்கே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. திரையரங்கம், வணிக வளாகம் மற்றும் பொழுபோக்கு விடுதிகளில் இருக்கைகள் எவ்வாறு சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்பதும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீசரன் ரங்கராஜன் வாதிடுகையில், ”திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

‘பந்தயம் கட்டி எழுத்தாளரானவர் ‘ – அகதா கிறிஸ்டி எழுதிய துப்பறியும் நாவலுக்கு நூற்றாண்டு

இதையடுத்து நீதிபதிகள், ”ஜனவரி 11 வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும். 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படும் நிலையில், காட்சிகளை அதிகப்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 11-க்கு ஒத்தி வைத்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்