Aran Sei

‘கியூபாவில் குழப்பதை உருவாக்க முயற்சிக்கும் அமெரிக்கா’ – உலக தொழிற்சங்க கூட்டமைப்பு கண்டனம்

கியூபாவில் குழப்பத்தை உருவாக்குவதற்கும் வெளிநாட்டு இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்துவதற்கும் அமெரிக்கா நிதியளித்து ஏற்பாடு செய்து வரும் முயற்சிகளுக்கு உலக தொழிற்சங்க கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

133 நாடுகளில் 10 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் உலக தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”கியூபா மக்களுக்குத் தங்களின் ஒற்றுமையை வெளிபடுத்தியிருப்பதோடு, அம்மக்களின் எதிர்காலத்தை எந்தவித வெளிப்புற குறிக்கீடும் இல்லாமல் தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

‘இருமுறை மக்களவைக்கு அனுப்பிய தொகுதி மக்களை கைவிட்ட மோடி’ – அசாதுதீன் ஓவைசி

கியூபா மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் 60 ஆண்டுகளாக  விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும் என கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும்பங்காற்றிய மக்களின் ஒற்றமையை வணங்குகின்றோம் என்றும், அம்மக்களை சர்வதேச சமூகம் வணிகப்பொருளாக பார்ப்பதையும்,  மனிதனை மனிதனே சுரண்டுவதையும் கடுமையாக எதிர்க்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

கியூபாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க  அமெரிக்கா முயன்று வரும் நிலையில், மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் மிகுவல் தியாஸ்-கேனல் கடந்த திங்கள் கிழமை கேட்டுக் கொண்டுள்ளார்.

Source : Granma.cu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்