Aran Sei

‘மதரஸா’ என்ற வார்த்தையே ஒழிக்க வேண்டும்: இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் இந்துக்கள்தான் – அசாம் முதல்வர் கருத்து

‘மதரஸா’ என்ற வார்த்தையே இருக்கக் கூடாது என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் மதரஸாக்களை சாதாரண பள்ளிக்கூடங்களாக மாற்ற, அசாமில் ஆளும் பாஜக அரசு கடந்த 2020-ம் ஆண்டு முடிவெடுத்தது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதரஸா நிர்வாகங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

ஆனால், இந்தாண்டு, குவஹாத்தி உயர் நீதிமன்றம் அசாம் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதன்படி அரசு நிதியுதவி பெரும் அனைத்து மதரஸாக்களும் மாநிலத்தில் உள்ள பொது பள்ளிக்கூடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

உ.பி: புதிய மதரஸாக்களுக்கு நிதி உதவி நிறுத்தம்: இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்

இந்நிலையில், குவஹாத்தி நகரில் கல்வி தொடர்பான மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “மதரஸா என்ற வார்த்தை இருக்கும் வரையில் தாங்கள் மருத்துவராகவோ, பொறியாளர்களாகவோ வர வேண்டும் என்று குழந்தைகளால் நினைக்க முடியாது. இந்த விஷயம் அந்தக் குழந்தைகளுக்கு தெரிய வந்தாலே போதும். அவர்களே மதரஸாக்களுக்கு செல்ல மாட்டோம் எனக் கூறி விடுவார்கள். உங்கள் (இஸ்லாமியர்கள்) குழந்தைகளுக்கு குரானை போதியுங்கள். யாரும் அதைத் தடுக்கப் போவதில்லை. ஆனால் அதை உங்கள் வீட்டில் வைத்து கொள்ளுங்கள்.

பொது இடத்தில் ஹிஜாப் அணியாதீர்கள் – பாஜக எம்.பி., மிரட்டல்

பள்ளிக்கூடங்களில் மதம் சார்ந்த படிப்புகளுக்கு இடம் கிடையாது. இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடங்கள் மட்டுமே பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான், மாணவர்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, அறிவியல் அறிஞராகவோ உருவாக முடியும். எனவே ‘மதரஸா’ என்ற வார்த்தையையே முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மதரஸாக்களில் பயிலும் குழந்தைகள், குரானை எளிதில் மனப்பாடம் செய்யும் அளவுக்குத் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒன்றினை கூறிக்கொள்கிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் இந்துக்கள்தான். இந்தியாவில் எவரும் இஸ்லாமியராக பிறப்பதில்லை. இந்துக்களாகவே பிறந்திருக்கிறார்கள். எனவே ஒரு இஸ்லாமிய குழந்தை திறமைசாலியாக இருந்தால், அதற்கு அக்குழந்தையின் இந்து பூர்வீகமே காரணம் என நான் கருதுகிறேன் என்று ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

Source : india today

ஜாதி பாக்காதீங்கனு சொல்றது தப்பா Gayathri Raghuram ? Jeeva Sagapthan

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்