Aran Sei

“தோழர் ” என்கின்ற வார்த்தை மாவோயிஸ்டுகளை குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது : சிறப்பு நீதிமன்றம்

credits : the indian express

ஸ்டேன் சுவாமி எழுதிய கடிதங்களில் (ஆதாரங்கள்) தோழர் என்கின்ற வார்த்தை பயன்படுத்துப்பட்டிருக்கிறது.தோழர் என்கின்ற வார்த்தை மாவோயிஸ்டுகளை குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளதை, சிறப்பு நீதிமன்றம் மேற்கோள் காட்டியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

84 வயதாகும் பழங்குடியினர் நல செயற்பாட்டாளரான ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட் மாநிலத்தில், காவல்துறையின் அத்துமீறலையும், மாநிலத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையை அரசு,  முறையாகச் செயல்படுத்த தவறியதையும், பழங்குடி  இன  இளைஞர்களைக்  சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதை எதிர்த்தும் குரல் கொடுத்து வந்தவர்

பீமா கோரேகான் வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி, கடந்த 2020 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் தேதி, தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) ஸ்டேன் சுவாமி ஜார்க்கண்டில் கைது செய்யப்பட்டார். பின்னர், மும்பையின் தலோஜா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, கடந்த ஐந்து மாதமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சத்தீஸ்கர் கண்ணி வெடி குண்டு தாக்குதல் – பேருந்தில் சென்ற மாவோயிஸ்ட் எதிர்ப்புப் படையினர் 5 பேர் பலி

இந்நிலையில், ஜாமீன் கோரி, ஸ்டேன் சுவாமி, பீமா கோரேகான் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”இந்தியாவில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சாதி மற்றும் நிலம் சார்ந்து நடக்கும் போராட்டங்கள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக செயல்பட்டு வந்ததால் மத்திய அமைப்புகள் என்னை குறிவைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மாவோயிஸ்ட்களுக்காக வேலை செய்கிறார் ஸ்டான் சுவாமி – தேசிய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டு

இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம், ”ஸ்டேன் சுவாமி தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்டுகளுடன் இணைந்து, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தவும், அரசாங்கத்தை கவிழ்க்கவும் சதி தீட்டம் தீட்டியதற்கான முகாந்திரங்கள் இருக்கிறது” என்று கூறியுள்ளது.

“சிறை அல்ல பிணை” என்பது அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தாது – மாவோயிஸ்ட் வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் கருத்து

”இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள்,  ஸ்டேன் சுவாமி தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்டின் உறுப்பினராக இருந்தது மட்டுமல்லாமல், ஜனநாயகத்தை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் எனும் அந்த இயக்கத்தின் குறிக்கோளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

ஒடிசா : வனப்பகுதியில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

மேலும், ”சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் IV ( தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது) மற்றும் VI ( தீவிரவாத இயக்கங்கள் ) ஆகியவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஸ்டேன் சுவாமி, இந்த குற்றங்களில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருக்கிறது. இந்த பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களுக்கு, ஜாமீன் வழங்கப்படுவதில்லை எனும் அடிப்படையில், ஸ்டேன் சுவாமிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

aransei.com/news/tamilnadu/kerala-opposition-party-need-investigation-on-maoist-death/

இந்த வழக்கு விசாரணையில், மாவோயிஸ்டுகளின் நடவடிக்கையை தொடர, ஸ்டேன் சுவாமி 8 லட்சம் ரூபாயை தோழர் (Comrade) மோகன் மூலம் பெற்றது தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ள நீதிமன்றம், ஸ்டேன் சுவாமி எழுதிய கடிதங்களில் (ஆதாரங்கள்) தோழர் என்கின்ற வார்த்தை பயன்படுத்துப்பட்டிருக்கிறது எனவும் “தோழர் என்கின்ற வார்த்தை மாவோயிஸ்டுகளை குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது” எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளதை, நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

கேரளா காடுகளில் மீண்டும் ஒரு ” மோதல் ” – மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

2018 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் பீமா கோரேகான் வழக்கில், 16-வது நபராகக் கைது செய்யப்பட்டுள்ள ஸ்டேன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்