Aran Sei

‘ஓநாய் ஒருபோதும் சைவமாகாது’ – ஈழப் பிரச்சினை குறித்து கி.வீரமணி

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசே தீர்மானிக்கவேண்டும் என்பது குற்றவாளியே நீதிபதியாக இருக்கலாம் என்று கூறுவது போன்றதாகும் – இது ஏமாற்றம் அளிக்கிறது’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

”தீர்க்கப்படாத ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் தீர்ந்துவிடும் என்று ‘மந்திரத்தால் மாங்காய் விழும்‘ என்று நம்பியவர்களைப்போல, அவரது கூட்டணியை ஆதரித்தனர். பிறகுதான் அவை வெறும் வாய்ச் சொல் வீரம், கானல் நீர் வேட்டை என்பது இரண்டாவது தடவை (தமிழ்நாடு ஏமாறாவிட்டாலும்கூட) பதவிக்கு வந்ததும் நாளும் நன்கு புரிந்து வருகிறது” என்று விமர்சித்துள்ளார்.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

இலங்கையில் மீண்டும் சிங்கள ராஜபக்சே குடும்பமே முழு அதிகாரத்தினையும் கைப்பற்றி, தமிழர்களின் வாழ்வுரிமையைத் தரைமட்டமாக்கிடத் திட்டமிட்டு இறங்கிவிட்ட்தாக கூறிய அவர், தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அதிபர், வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியுள்ளதை கவணப்படுத்தியுள்ளார்.

அதில்,‘‘இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி வழங்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் அந்நாட்டு அரசே முடிவெடுக்க வேண்டும். இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை நடை முறைப்படுத்துவது குறித்து அந்த நாட்டு அரசுதான் முடிவு எடுக்கவேண்டும்‘’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர்  கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள வீரமணி,  உலகத் தமிழர்களுக்கும், மனித உரிமையில் நம் பிக்கை உள்ளவர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தரும் செய்தி என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உழைப்பில்லாமல் ஆதியோகி சிலை உருவாகியிருக்குமா?: ஜக்கியின் கம்யூனிசம் குறித்த கருத்திற்கு பதில் – இரா.முருகவேள்

‘‘குற்றவாளியே நீதிபதியாக அமர்ந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்’’ என்பதுபோல்தானே இது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

. ‘ஓநாய் ஒருபோதும் சைவமாகாது!’ ஆதிக்கவாதிகளால் விடியலும், வெள்ளியும் முளைக்காது என்பதை இனியாவது உணர்ந்தால் நல்லது என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  அறிக்கையில் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்