Aran Sei

ஒன்றிய அரசு என்ன செய்ய நினைத்தாலும் எங்கள் உரிமைக்கான போராட்டம் தொடரும் – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தலைவர்கள் சூளுரை

ன்றிய அரசு என்ன செய்யவேண்டுமென நினைக்கிறதோ செய்யட்டும், ஆனால், உரிமைக்கான எங்கள் போராட்டம் நீதிமன்றத்திலும், வெளியேயும் தொடருமென ஜம்மு காஷ்மீர் மாநிலத்தலைவர்கள் தெரிவித்துள்ளதாக தி வயர் நிறுவனர் சித்தார்த் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

வலி பொறுக்க முடியாமல் அழக்கூட உரிமை இல்லையா? – ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மெஹபூபா முப்தி

பிரதமர் மோடி மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைவர்களுக்கு இடையேயான கூட்டம் குறித்து அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மோடியுடனான கூட்டத்தின்போது ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசியுள்ளனர். அம்மாநிலத்தின் சுயாட்சி அரசியலமைப்பு அதிகாரத்திற்கு எதிரான மீறல்கள், மாநில அதிகாரம் இழப்பு, சுதந்திரங்களை மீறுவது குறித்து குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் எங்கு அனைவரின் ஒத்துழைப்பும் உள்ளது என்று ஒருவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்” என்று கூறியதாக பதிவிட்டுள்ளார்.

ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு – மியான்மர்க்கு திருப்பி அனுப்ப திட்டம்

மேலும், “இந்தக் கூட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் முதலில் ஜம்மு காஷ்மீர் தலைவர்களை முதலில் பேச அழைத்துள்ளார். இந்நிலையில், கூட்டத்தின் நடைமுறை என்ன? அரசு முதலில் பேச வேண்டும்? என்று கேள்வியெழுப்பியதாகவும், அதற்கு, இல்லை, நீங்கள் ஜம்மு காஷ்மீர் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கூறுங்கள்” என்றும் தி வயர் நிறுவனர் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.

சித்தார்த் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “தலைவர்கள் பேசியதற்கு பின்னர், அமித் ஷா 2 கருத்துக்களைக் கூறியுள்ளார், 1. விரைவில் தேர்தல் வரவுள்ளதால் அதிகாரத் தளர்வை மேற்கொள்ள மோடி அரசு விரும்புகிறது. நாங்கள் ஜனநாயகரீதியான நடைமுறையை விரும்புகிறோம் 2. நாங்கள் உறுதியளித்த மாநில அதிகாரத்தை மீட்டெடுப்பது உரிய நேரத்தில் செய்யப்படும். ஆனால் உறுதியான தேதி குறிப்பிடவிரும்பவில்லை” என்று கூறியதாகவும் அவர் தன் பதிவில் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் போராட்டதின் எதிரொலி: 4ஜி இன்டர்நெட் சேவைக்கு தடையை நீட்டித்த அரசு

மேலும், இறுதியாகப் பேசிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் பேசியதை குறித்து வைத்துள்ளதாகவும், தானோ அல்லது அமித் ஷாவோ இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம் என்று சித்தார்த் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து இறுதியாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனவே நான் இந்தக் கூட்டத்தின் வழியாக என்ன முடிவு எட்டப்பட்டது? என்ற கேள்விக்கு அவர்கள், ஒன்றும் எட்டப்படவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், ஒன்றிய அரசு என்ன செய்யவேண்டுமென நினைக்கிறதோ செய்யட்டும், ஆனால், உரிமைக்கான எங்கள் போராட்டம் நீதிமன்றத்திலும், வெளியேயும் தொடரும்” என்று அவர்கள் தெரிவித்ததாகவும் தி வயர் நிறுவனர் சித்தார்த் தன பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்