நாகாலாந்தில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து ஆய்வு செய்வதற்காக டிசம்பர் 26 ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு, மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ கூறியது போல் 45 நாட்களுக்குள் (பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள்) அறிக்கையைச் சமர்ப்பிக்க வில்லை.
டிசம்பர் 4 அன்று நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதில் இருந்து மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியத் தலைமை பதிவாளர் விவேக் ஜோஷி தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு ஜனவரி மாதம் நாகாலாந்துக்கு பயணம் மேற்கொண்டது. ஒன்றிய உள்துறை அமைக்கம் 3 மாதங்களுக்குள் (மார்ச் 26) இந்த குழு அதன் பரிந்துரைகளைத் தெரிவிக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு 45 நாட்களுக்குள் (பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள்) அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இச்சட்டம் நீக்கப்படும் என்று கூறியிருந்தார்.
டிசம்பர் 26 அன்று ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு பற்றிய கூட்டு அறிக்கையை நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோவுடன் சேர்ந்து நாகாலாந்தின் முன்னாள் முதலமைச்சரும், நாகா மக்கள் முன்னணியின் தலைவருமான ஜெலியாங் வெளியிட்டுள்ளார். அதில் மியான்மர் மற்றும் அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் தவிர, நாகாலாந்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்று கூறியுள்ளனர்.
இந்த சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய டிசம்பர் 26 அன்று ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்த நிலையில், நாகாலாந்தில் இன்று (டிசம்பர் 30) மேலும் 6 மாதங்களுக்கு இச்சட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஜூன் 30 ஆம் தேதி இங்கு இச்சட்டம் நீட்டிக்கப்பட்டது.
பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மணிப்பூரில் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.