Aran Sei

வடகிழக்கு மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை

டகிழக்கு மாநிலங்களில் 10 ஆம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்ததற்கு வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றையும் வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு எழுதியுள்ளது. அதில்,

‘அசாமிய மொழியை அழிக்க ஒன்றிய அரசு முயல்கிறது’ – அமித் ஷாவின் பேச்சுக்கு வடகிழக்கு மாநில அமைப்புகள் கண்டனம்

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்தியை கட்டாயப்படாமாக்குவது வடகிழக்கு மாநிலங்களில் பேசப்படும் மொழிகளுக்குத் தீங்கு விளைவிக்கும். 10 ஆம் வகுப்புவரை மாநில உள்ளூர் மொழிகளைக் கட்டாய பாடமாக்க வேண்டும். இந்தி மொழியை விருப்ப பாடமாக வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்று வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளது.

ஏப்ரல் 7ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், 10ஆம் வகுப்புவரை பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயமாக்க அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்திருந்தார்.

அமித் ஷா பேசியதன் எதிரொலி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #இந்தி_தெரியாது_போடா

“இந்திய மொழி பேசுபவர்களில் ஏறத்தாழ 40-43 சதவீதம் பேர் இந்தி மொழி பேசுகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஏராளமான பிற தாய்மொழிகள் உள்ளன. அவைதான் இந்தியாவிற்கு ஒரு பன்மொழி தேசத்தின் பிம்பத்தை அளிக்கிறது என்று வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“வடகிழக்கு மாநிலங்களில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக இப்பகுதியில் திணிப்பது பழங்குடி மொழிகளுக்குத் தீங்கு விளைவிக்கும். ஆதலால் வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு இந்தக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறது.

‘வடகிழக்கு மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்குவது பழங்குடி மொழிகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து’ – அசாம் சாகித்ய சபா

இந்தியை கட்டாய பாடமாக்குவதற்குப் பதிலாக வடகிழக்கு மாநிலங்களில் பேசப்படும் பூர்வீக மொழிகளை மேம்படுத்துவதில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Source : newindianexpress

தமிழ் Vs இந்தி

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்