Aran Sei

காலத்தால் ஆறாத வடு: நாஜிக்கள் செய்த படுகொலையின் நினைவு நாள்

81 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜெர்மனியின் நாஜி  படை சோவியத் யூனியனை ஆக்கிரமித்தது. அந்தப் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் சோவியத் மக்கள் செய்த மாபெரும் தியாகத்தை நாம் மறந்து விட முடியாது. ஒவ்வொரு 10 நாஜிகளில் 7 பேர் கிழக்குப் போர்முனையில் ஒரு செம்படை வீரரால் கொல்லப்பட்டனர்.

நாஜி பாசிச மிருகத்தனத்திற்கு எதிராக உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில் 2.7 கோடி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை சோவியத்து ரஷ்யா இழந்தது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டது ஏன்? – பாஜக ஆடும் அரசியல் விளையாட்டு

அந்தக் காலக்கட்டத்தில் 15 வெவ்வேறு நாடுகள் சேர்ந்ததுதான் சோவியத் ரஷ்யா. ஒன்றியத்தில் இருந்த சிறிய நாடுகளில் ஒன்றான பெலாரஸில் நடந்தது என்ன?

ஸ்லாவ்களை தாழ்த்தப்பட்டவர்கள் என ஜெர்மானியர்கள் கருதியதால், நாஜிக்கள் பொதுமக்களை அழித்தார்கள். பெலாரஸில் 10,000 கிராமங்கள் மற்றும் 1 கோடியே 20 லட்சம் வீடுகள் அழிக்கப்பட்டன. மக்களில் நான்கு பேரில் ஒருவர் தூக்கிலிடப்பட்டனர்.  பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எரிக்கப்பட்டோ அல்லது உறைபனியில் உறையும்படி வைக்கப்பட்டோ கொல்லப்பட்டனர். போருக்கு முந்தைய மக்கள் தொகை 5 கோடியே 50 லட்சமாக  இருந்தது. போரில் பெலாரஸ் கிராமங்களில் வாழ்ந்துக் கொண்டிருந்த எளிய பொதுமக்கள் ஒரு கோடியே 37 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவில் காலநிலை அகதிகள் முதல் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் வரை – தமிழ்ப் பிரபாகரன்

நாஜிக்கள் அனைத்து கிராமங்களையும் அழித்தனர்.  அவர்கள் தங்கள் இனப்படுகொலை சுத்திகரிப்பு கொள்கையின் அடிப்படையில், சிறிதும் இரக்கமின்றி ஆண், பெண், குழந்தை, முதியவர்கள்  என அனைவரையும் கொன்று குவித்தனர்.  இந்த அதிர்ச்சியிலிருந்து  அந்த மக்கள் இன்றுவரை மீளவில்லை. கோடிக் கணக்கான மக்களின் பெயர்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான போர் நினைவுச்சின்னங்கள் அங்கே இப்போதும் உள்ளன.  அதில் நூறாயிரக்கணக்கான குழந்தைகள் பெயர்களும் உள்ளன. அவர்கள் இராணுவம் அல்லது போர்தந்திர நோக்கத்திற்காக கொல்லப்பட்டவர்கள்.

நாஜிப்படை சோவியத் யூனியனுக்குள் நுழைந்தபோது, ​​அது இராணுவ வெற்றிக்கான படையெடுப்பாக இருக்கவில்லை. மாறாக “தங்களைவிடத் தாழ்ந்தவர்களாகக் கருதும்”  மனித இனத்தை  அழிக்கும் நோக்கத்துடன் ஒரு இன மற்றும் மதப்படுகொலையாக இருந்தது. இவை அனைத்தையும் சோவியத் யூனியனின் மற்ற பகுதிகளுக்குப்  பொருத்திப் பாருங்கள். பட்டினியாலும், தீயிட்டுக் கொளுத்தியும், உறைபனியில் உறைய வைத்தும் சித்ரவதை செய்தும் கொன்ற 2 கோடியே 70 லட்சத்திற்கும் மேலான செம்படை வீரர்களின் மரணத்திற்கு ஜெர்மானியர்கள் இதுவரை விலை கொடுக்கவே இல்லை.

தமிழ்நாடு: அதிகரிக்கும் காவல் சித்திரவதை மரணங்களும் அதிகார வர்க்கத்தின் கோர முகங்களும் – தீர்வு என்ன?

பார்பரோசா நடவடிக்கை ஜூன் 22, 1941 இல் கிழக்கு போர் முனையில் துவங்கியது.  இதில் மனித வரலாற்றில் வேறு எந்த போர் அரங்கிலும் இல்லாத அளவுக்கு அதிகமான படைகள் ஈடுபடுத்தப்பட்டன. இப்பகுதி உலகின் மிகப் பெரிய போர்களையும், மிகக் கொடூரமான அட்டூழியங்களையும்,  சோவியத் தரப்பிலும், அச்சுநாடுகள் தரப்பிலும் மிக அதிக உயிரிழப்புகளையும் கண்டது.  இவை அனைத்தும் இரண்டாம் உலகப் போரின் போக்கையும் 20 ஆம் நூற்றாண்டின் அடுத்தடுத்த வரலாற்றையும் பாதித்தன.

இஸ்லாமியர் போராட வேண்டுமா ஒதுங்கிச் செல்ல வேண்டுமா? – ஆர். அபிலாஷ்

ஜெர்மனி படைகள் இறுதியில் சுமார் 50 லட்சம் சோவியத் செம்படை துருப்புகளைக் கைப்பற்றின. “பசி திட்டத்தின்  (Hunger Plan)” கீழ் ஜெர்மனியின் உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்கவும், ஸ்லாவிய மக்களை பட்டினியால் அழித்தொழிக்கவும். நாஜிக்கள் வேண்டுமென்றே பட்டினி போட்டு  43 லட்சம் சோவியத் போர்க் கைதிகளையும், ஏராளமான பொதுமக்களையும் கொன்றனர்.

படுகொலையின் ஒரு பகுதியாக நாஜிக்களும் அவர்களுடைய ஒத்துழைப்பாளர்களும் வெகு மக்கள் மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் நச்சுவாயு தாக்குதல்கள் மூலம்  10 லட்சத்திற்கும் அதிகமான சோவியத் நாட்டு யூதர்களைக் கொன்றனர். நேச நாடுகளுடன் சேர்ந்து, நாஜிக்கள் தங்கள் கொடூரமான ஆதிக்கத் திட்டத்தில் வெற்றி பெற்றனர்  என்பதற்காக, சோவியத் மக்கள் செய்த இந்த மாபெரும் தியாகத்தை நாம் மறந்துவிடக்கூடாது.

கட்டுரையாளர்: நாராயணன்

சாமி சொத்தை திருடினா மனசு புண்படாதா

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்