Aran Sei

கொரோனா மூன்றாவது அலையில் பெரிய பாதிப்புகள் இருக்காது –  ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

ந்தியாவில் கொரோனா இரண்டாவாது அலையில் ஏற்பட்டதை போன்ற கடுமையான பாதிப்புகள் மூன்றாவது அலையின்போது இருக்காது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் லண்டன் இம்பீரியல் கல்லூரியுடன் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள்மூலம் இதனை தெரிவிப்பதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப மீட்டெடுக்காத வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன் – மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி

”முந்தைய நோய்த் தொற்றிலிருந்து உருவான நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக இழக்கும் வரை புதிய அலையால் தாக்கம் இருக்காது. எனவே இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக இருக்காது. புதிய வைரஸ் மாறுபாடுகள், அதிக தொற்றுகளை பரப்ப அவற்றின் உருவாக்கமும் தீவிரமாக இருக்க வேண்டும்.

எனவே தடுப்பூசி செலுத்துவதை விரைவு படுத்துவதன் மூலம், தற்போதைய மற்றும் எதிர்கால அலைகளின் பாதிப்புகளை குறைக்க முடியும். நாங்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள்மூலம் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது நிருபணமாகியுள்ளது. ஆனால் அவை இரண்டாவது அலை அளவிற்கு தீவிரமாக இருக்காது. இதில் தடுப்பூசிகளின் பங்கு மிகமுக்கியமானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாஜகவுக்கு எதிராகன தேசிய கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றாலும், கூட்டுத் தலைமையே இருக்கும்’ – சரத் பவார்

முன்னதாக இந்தியாவில் 11 மாநிலங்களில் கொரோனா டெல்டா பிளஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. 45 ஆயிரம் மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் 51 பேருக்கு டெல்டா பிளஸ் மாறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Source : The Hindu

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்