Aran Sei

காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி – பாஜகவுக்கு சாதகமாகும் என திருமாவளவன் எச்சரிக்கை

மிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவில் உள்ள பிற அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பாஜகவுக்கு எதிராக அரசியல் முன்னணி ஒன்றை அமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவன் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது பல்வேறு கட்சிகளுக்குத் தலைமை தாங்கும் முன்னாள் தலைவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு காங்கிரஸ் தலைமையை வலியுறுத்திய திருமாவளவன், பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கும் வகையில் ஒரு மூன்றாவது அணி உருவாக நாம் அனுமதிக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

‘டெல்லியில் போராடிய பயிற்சி மருத்துவர்களைத் தாக்கிய காவல்துறை’ – நடவடிக்கை எடுக்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் இந்தியாவில் பாஜக மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தது இந்திய அளவில் அரசியல் முன்னணி பற்றிய பல ஊகங்களை எழுப்பியது. மூன்றாவது அணி அமைப்பதில் சந்திரசேகர் ராவ் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறது. பாசிசக் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறும் பாஜகவுக்குச் சாதகமான அரசியல் சூழலைக் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி உருவாக்கும் என்பதால், இதே போக்கை திமுகவும் பின்பற்றுவதை நாங்கள் விரும்பவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, ஹரித்துவாரில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தனர். இந்து ராஷ்டிரத்தை அமைப்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. இந்தியா என்பதை ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் அட்டை மற்றும் ஒரே மொழி எனக் கூறும் பாஜகவிற்கு இந்தியாவின் பன்முகத்தன்மையில் நம்பிக்கை இல்லை. எனவே பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் அது நம் தேசத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

ஆப்கானில் கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் – சிறந்த பத்திரிகையாளரென்று விருது அறிவித்த மும்பை பத்திரிகையாளர் மன்றம்

ஆகவே மூன்றாவது அணியை உருவாக்கும் எந்த முயற்சியும் இந்தியாவுக்கு ஆபத்தாகவே அமையும். மேலும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் அந்தந்த பிராந்தியக் கட்சிகள் கூட்டணி வைத்திருந்தால் பல மாநிலங்களில் பாஜகவின் எழுச்சியை நாம் தவிர்த்திருக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியில் பிராந்தியக் கட்சிகள் சேராமல் இருப்பதை ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக உறுதி செய்தது. இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் அதிகம் இருந்தாலும், அந்த வாக்குகளைப் பிரிப்பதில் பாஜக வெற்றி பெற்றது.

பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்க விடாமல் பாஜக பார்த்துக் கொள்கிறது. மேலும் பல்வேறு சாதிகளில் தவறான தற்பெருமைகளைத் தூண்டி விட்டு இதனைச் சாதிக்கிறது. சாதிய அடையாளத்தை ஒருங்கிணைப்பதன் மூலமே இந்து மத ஒருங்கிணைப்பை அடைய முடியும் என்பது பாஜகவிற்கு நன்றாகத் தெரியும்.

கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் பிராந்தியக் கட்சிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்குப் பிராந்தியக் கட்சிகள் கடும் சவாலாக இருக்கும் மாநிலங்கள் பல உள்ளன. தமிழகத்தில் மட்டும் தான் காங்கிரசுடன் இணைந்து திமுக செயல்பட்டது.

பாலியல் துன்புறுத்தலைத் தவிர்க்க ஆண் நண்பர்களுடன் பார்த்துப் பழக வேண்டும் – ஜே.என்.யு சுற்றறிக்கைக்கு மாணவியர்கள் எதிர்ப்பு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் முன்மொழிந்திருந்தார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமராகும் ஆசையை வளர்த்து வருகிறார். மூன்றாவது அரசியல் முன்னணியின் மூலம் பிரதமராக வருவதற்குப் பல பிராந்திய தலைவர்கள் விரும்புகின்றனர்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கணிசமான உறுப்பினர்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உள்ளது. எனவேதான் பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்குமாறு ஸ்டாலினை நான் கேட்டுக்கொள்கிறேன்.

உள்ளூர் அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக இடதுசாரிகள் மற்றும் மம்தாவுடன் இணைந்து செயல்படும் நிலையில் காங்கிரஸ் இல்லை. கேரளாவிலும் இதே நிலைதான் நீடிக்கிறது என்ற கேள்விக்கு அதனை மாற்ற ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோருடன் காங்கிரஸ் தலைமை பேசலாம். அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்