Aran Sei

எவை எல்லாம் வரதட்சணை மரணங்கள்? – புதிய விளக்கமளித்த உச்ச நீதிமன்றம்

ணவனின் வீட்டில் மனைவி இறப்பதற்கு முன், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் துன்புறுத்தப்பட்டிருந்தால் அந்த மரணத்தை வரதட்சணை மரணமாக கருதலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான நீதிமன்ற அமர்வு, இந்தியத் தண்டனைச் சட்டம் (வரதட்சணை மரணம்) பிரிவு 304பி க்கு விளக்கம் அளித்துள்ளது.

மனைவி இறப்பதற்கு முந்தைய அண்மைக் காலங்களில் அவள் கொடுமைப்படுத்தப்பட்டிருப்பதை நீதிமன்றத்திடம் நிரூபிக்க வேண்டும். மேலும் அந்த துன்புறுத்தல்கள் தொடர்ச்சியாக இருந்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‘அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை தடை செய்யுங்கள்’ – ஒன்றிய அரசுக்கு ஆர்எஸ்எஸ் பொருளாதார பிரிவு வேண்டுகோள்

கணவனின் உடல் அல்லது மனரீதியான இத்தகைய தொடர்ச்சியான துன்புறுத்தல்கள், மனைவியின் வாழ்க்கையைப் பரிதாபமாக மாற்றி, அவளைத் தற்கொலைக்குக் கூட கட்டாயப்படுத்தலாம், ”என்று நீதிமன்ற அமர்விற்கான தீர்ப்பை எழுதிய நீதிபதி ஹிமா கோஹ்லி தெரிவித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு பீகாரில் திருமணமான பெண் ஒருவர் சில மாதங்களிலேயே மரணமடைந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த பெண் தனது திருமண வாழ்க்கையில் சில மாதங்கள் தொடர்ந்து வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது கணவனின் வீட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் பல நாட்களுக்குப் பிறகு அவரது இறந்த உடல் ஆற்றோரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

பெண் விரோத ஜே.என்.யு சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுக – தேசிய மகளிர் ஆணையத் தலைவர் வலியுறுத்தல்

அவரது கணவரால் ஆற்றில் தள்ளப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கீழ் நீதிமன்றங்கள் கொடுத்த தண்டனையை  உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கை ஒட்டி வரதட்சணை மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்