Aran Sei

உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத வரை போராட்டம் தொடரும் – சம்யுக்தா கிசான் மோர்ச்சா

யிரழந்தவர்களுக்கு நிவாரனம் வழங்காத வரை போராட்டம் தொடரும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் ஹரிந்தர் சிங் லகோவால் தெரிவித்துள்ளார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவில் கையெழுத்திட்ட நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் சங்கங்கள் தங்கள் போராட்டத்தை இன்னும் முடிவுக்குக் கொண்டுவரவில்லை.

காவல் சித்தரவதைக்கு ஆளான இஸ்லாமியர்களுக்கு பி.எப்.ஐ சட்ட போராட்டத்தால்தான் நீதி கிடைத்தது’ – முஹம்மது சேக் அன்சாரி

வேளாண் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு (MSPs) சட்டப்பூர்வ உத்தரவாதம் என்ற கோரிக்கையை ஆராய அமைக்கப்படும் குழுவிற்கு ஐந்து பெயர்களை அனுப்புமாறு ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக முறையான கடிதத்தை அரசாங்கம் அனுப்ப வேண்டும் என்று விவசாயத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விவசாயிகளின் இறப்பு குறித்த விவரங்கள் இல்லாததால் இழப்பீடு வழங்க முடியாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேசு மீதுள்ள உபா வழக்கை திரும்பப் பெறுக – வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கூட்டறிக்கை

சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் ஹரிந்தர் சிங் லகோவால்,”குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து ஆராய ஐந்து பேரை கேட்டுள்ளது ஒன்றிய அரசு. அனுப்பும் விவசாயிகளின் பெயர்களை நாங்கள் முடிவு செய்துள்ளோம், ஆனால் இன்றுவரை அரசாங்கம் எழுத்துப்பூர்வ தகவல் அனுப்பவில்லை. இந்தக் குழு எதைப் பற்றியது, அதன் ஆணை அல்லது விதிமுறைகள் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அத்தகைய விவரங்கள் இல்லாத நிலையில் நாம் மேற்கொண்டு தொடர முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

‘தூய்மைப் பணியாளர்களை கண்ணியமான முறையில் நடத்துக’ – சென்னை மாநகராட்சிக்கு சிபிஎம் வேண்டுகோள்

விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப் பெறுவதுடன், போராட்டத்தின் போது இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வரை தாங்கள் வீடு திரும்ப மாட்டோம் என்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் ஹரிந்தர் சிங் லகோவால் கூறியுள்ளார்.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்