Aran Sei

“பத்திரிகையாளர்களை தூக்கிலிட வேண்டும்” – நீக்கப்பட்ட வீடியோ : கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர்கள்

பத்திரிகையாளர்களை தூக்கிலிட வேண்டும் என கூறிய நபரின்  யூட்யூப் வீடியோ நீக்கப்பட்டதை கண்டித்து, பாஜக தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீவிர வலதுசாரி மற்றும் இந்துத்துவ சித்தாந்த்தை முன்னிறுத்தும் ”தி ஸ்ட்ரிங்” எனும் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டது. கடந்த ஒரு வருடமாக செயல்பட்டு வரும் இந்த சேனலை, தற்போது நான்கரை லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இதில் வரும் செய்திகளை, வினோத் குமார் எனும் நபர் தொகுத்து வழங்குகிறார்.

அந்த சேனலில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட வீடியோவில்,  தொகுப்பாளர் மிகவும் ஆபாசமான அறுவெறுக்கதக்க மொழியில் பேசியுள்ளதாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை சிறையிலிட வேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் தி குவிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டத்தை பற்றி பாடம் எடுக்கும் வன்முறையாளர்கள்: நடிகர் சித்தார்த் கண்டனம்

பத்திரிகையாளர்கள் பர்கா தத், முகமது சுபயர், சாகேத் கோகலே மற்றும்  நியூஸ் லாண்ட்ரி, ஸ்க்ரால், ஏஎல்டி நியூஸ், தி வயர், தி குவிண்ட், தி நியூஸ் மினிட், இந்தியா ஸ்பெண்ட், அவுட்லுக் இந்தியா, பரி ஆகிய செய்தி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என அவர் வீயோவில் கூறியுள்ளார்.

‘வன்முறையைத் தூண்டிய பாஜக; டெல்லியில் ரத்தம் சிந்திய விவசாயிகள், காவலர்கள்’ – சிவசேனா குற்றச்சாட்டு

இந்நிலையில், யூட்யூப் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிராக இந்த பதிவு இருந்ததால், அந்நிறுவனம் இந்த பதிவை நீக்கியுள்ளது. ட்விட்டரில், இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள ”தி ஸ்ட்ரிங்” யூடியூப் சேனல், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சகம், அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, ரிபப்ளிக் டிவி, ஸ்வராஜ்யா இணையதளம், ஒப் இந்தியா இணையதளம் ஆகியோரை டேக் செய்து, ”இதை குறித்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தி ஸ்ட்ரிங்கில் வெளியான பதிவு நீக்கப்பட்டதை கண்டித்து, பல பாஜக முன்னணி தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்ட்டப்பட்ட பாஜகவைச் சேர்ந்த கபில் மிஷ்ரா, ”இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தி ஸ்ட்ரிங் உண்மைகளை மட்டுமே வெளிக்கொண்டு வந்தது. இதில் அவதூறாகாவோ அல்லது பிரச்சனையை ஏற்படுத்தக் கூடிய விஷயமோ எதுவுமில்லை. இந்த வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தி ஸ்ட்ரிங் சேனலில் வெளியான வீடியோ முடக்கப்பட்டதற்கு தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா, மகாராஷ்ட்ரா பாஜகவின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் நகுனா, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த விகாஸ் பாண்டே, முன்னாள் சிவசேனா தொண்டர் ரமேஷ் சொலங்கி, ஒப் இந்தியா இணையதளத்தைச் சேர்ந்த நுபுர் ஷர்மா ஆகியோர் தங்கள் ட்விட்டர் தளத்தில் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்