சனாதானத்தை அழிப்பதே காங்கிரஸின் கொள்கை என்று காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
“காங்கிரஸ் அல்லாத கூட்டணி குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திருமாவளவனும் இதையே பேசுகிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அளவில் கவனம் கொள்ள வேண்டும் என்கிற குரல்கள் எழுகின்றன என்று பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தன்னுடைய சானக்யா யூடியூப் சேனலில் கே.எஸ்.அழகிரிவுடனான நேர்காணலில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “நீங்கள் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனின் உரையைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர். காங்கிரஸ் அல்லாத கூட்டணியில் யாரும் இறங்க வேண்டாம் மம்தா பானர்ஜி அப்படியான கூட்டணி முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் நாம் ஆதரிக்க கூடாது என்று திருமாவளவன் தெரிவித்ததாக பதிலளித்துள்ளார்.
டிசம்பரில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை – இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்
மேலும், இந்தக் கூட்டணி நீடித்து இருக்க வேண்டும்; சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும்; அதற்கு எப்போதும் காங்கிரஸ் நமக்கு இருக்க வேண்டும்; நாம் எப்போதும் காங்கிரசோடு சேர்ந்து இருக்க வேண்டும்; மம்தா பானர்ஜி போன்றோருடைய கருத்து தவறான கருத்து. திருமாவளவனின்.கருத்து எங்கள் கூட்டணியின் கொள்கை பிரகடனம் போல் உள்ளது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசிய அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரின் கருத்தை முதலமைச்சர் அங்கீகரித்து உள்ளார். முதலமைச்சர் கூறும்போது, “நான் எப்போதும் திருமாவளவன் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவன் இப்பொழுதும் அவர் சொன்னதை கவனத்தில் வைத்துக் கொண்டு ஏற்றுக்கொள்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்று காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இந்த உரையாடல் குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, “ஸனாதன (இந்து) தர்மத்தை அழிக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் நம்மோடு இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியதை ஏற்கும் இந்த இந்து விரோத காங்கிரஸை அடையாளம் கண்டு புறக்கணிப்போம். இந்த வீடியோவை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்ப்போம்”. என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.