Aran Sei

முகலாயர்களை வீழ்த்த வேண்டும் – தேஜஸ்வி சூர்யா மீண்டும் சர்ச்சை பேச்சு

credits : the hindu

”எவ்வாறு லச்சிட் போர்புகன், முகலாயர்களை வீழ்த்தினாரோ, அதே போன்று பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் உறுப்பினர்களும் இந்த முகலாயர்களை (காங்கிரஸ் மற்றும் ஏஐயுடிஏஃப்)  தோற்கடித்து,  வெளியேற்ற வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில், வருகின்ற மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பாஜகவின் இளைஞர் பிரிவு) சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

’இஸ்லாமிய வெறுப்பாளருக்கு பாஜக தேசிய பதவியா?’ அரபு நாட்டினர் கண்டனம்

இந்தக் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா, காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியை (ஏஐயுடிஎஃப்) கடுமையாக விமர்சித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தலில் கைதான பாஜக இளைஞரணி செயலாளர் – போதை பழக்கத்திற்கு அடிமையானவரென்று தந்தை குற்றச்சாட்டு

அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், ”காங்கிரஸ், பத்ருத்தின் அஜ்மலை (ஏஐயுடிஎஃப் தலைவர்) பின் தொடர தொடங்கிவிட்டது. காங்கிரஸ் மற்றும் ஏஐயுடிஎஃப் அசாமியர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க முடியாது. இன்றைய தேதியில் காங்கிரஸ் மற்றும் ஏஐயுடிஎஃப் முகாலாயர்களின் பிரதிநிதிகளாக செயலபடுகின்றனர். அவர்கள் நம்முடைய பிரதிநிதிகள் அல்ல” என தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக இளைஞரணி செயலாளர் – பாஜக நிர்வாகி ராகேஷ் சிங்கின் சதித்திட்டம் என குற்றச்சாட்டு

மேலும், “அசாமின் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பாற்றவும், இந்துத்துவத்தை வலுப்படுத்தவும் இந்த முகலாயர்களை (காங்கிரஸ் மற்றும் ஏஐயுடிஎஃப்) நாம் தோற்கடிக்க வேண்டும்” என்று கூறியுள்ள தேஜஸ்வி சூர்யா, ”எவ்வாறு லச்சிட் போர்புகன் முகலாயர்களை வீழ்த்தினாரோ, அதே போன்று  பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் அனைத்து உறுப்பினர்களும் இந்த முகலாயர்களை தோற்கடித்து, அவர்களை வெளியேற்ற வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

1671 ஆம் ஆண்டு நடந்த சாரைகாட் போரில், படைத்தளபதி லச்சிட் போர்புகன், முதலாம் ராஜாராம் சிங் தலைமையிலான முகலாயப் படையைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்