Aran Sei

ஜம்மு காஷ்மீரில் பாஜக அரசை விட மன்னராட்சியே சிறப்பாக இருந்தது – குலாம் நபி ஆசாத் விமர்சனம்

ம்மு காஷ்மீர்  மக்கள் வறுமையை நோக்கி சென்றனர், தற்போதைய அரசை விட மன்னராட்சியேஆட்சி சிறந்தது என்று காங்கிரஸ் மூத்த  தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழில் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் வறுமையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘விவசாய சட்டங்கள் மீண்டும் அமல் படுத்தப்படும்’ – ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

மன்னர்களின் எதேச்சதிகார ஆட்சி தற்போதைய ஆட்சியைக் காட்டிலும் மிகச் சிறந்தது என்று கூறியுள்ளார். மகாராஜா (ஹரி சிங்) நிலம் மற்றும் வேலை வாய்ப்புகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்களிடமிருந்து பாதுகாப்பதை உறுதி செய்த்தாக குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று  சர்வாதிகாரி என்று அழைக்கப்படும் மன்னர் ஹரி சிங்  தற்போதைய அரசாங்கத்தை விட மிகச் சிறந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய் காம்தி மக்களின் கலகமே முதல் சுதந்திரப் போராட்டம் – அருணாச்சல பிரதேச துணை முதல்வர் தகவல்

தொழில் இல்லை, வேலை இல்லை, விலைவாசி உயர்வு, வளர்ச்சிப் பணிகள் முடங்கியதால், மக்கள் வேதனையில் உள்ளனர்,” என்று காங்கிரஸ் மூத்த  தலைவர்  குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

Source: the hindu

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்