Aran Sei

அதிகாரத்தின் பொய்களுக்குப் பின்னால் இருக்கும் பெரும்பான்மை மனநிலை – அஜய் குடாவர்த்தி

தொற்று நோயை எதிர்த்துப் போராடத் தவறியதன் மையமாக பெரும்பான்மையினரின் மனநிலை உள்ளது. பெரும்பான்மைவாதம் அதன் பெயரில் இருப்பது போல அன்றி ஒரு மிகச்சிறிய சிறுபான்மையினருக்கு ஆதரவாக பெரும்பான்மை மக்களை ஒதுக்குகிறது. இந்த நியாயமான உணர்வின்றி ஒதுக்கப்படுதலுக்குத்  தரும் அனுமதிதான் நரேந்திர மோடி பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுமை. மேலும்,  கூட்டுப்பொறுப்பு மற்றும் ஒருவருக்கொருவர் காட்டும் இரக்கம் ஆகியவைத் தேவைப்படும் நெருக்கடியை எதிர்த்தப் போராட்டத்தின் தோல்விக்கு, ஏதோ ஒன்றை இந்தச் சமூகம் நம்பி, கொண்டாடியதுதான் காரணம். பல்வேறு சமூகக் குழுக்களால் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படாதனவற்றை பெரும்பான்மையினர் மனநிலை நியாயப்படுத்துகிறது. இதன் துவக்கமாக, இது முதலில் துன்பம் மற்றும் வன்முறையும் கூட நிலைமைகளைச் சரி செய்ய அவசியமாகிறது என நியாயப்படுத்துகிறது. இது எப்போதும் ‘ இந்திய சூழலில் முஸ்லீம்கள்’ என்பது போன்ற நம்மை எதிர்த்துப் போராடுபவர்கள்  அல்லது எதிரிகள் என கருதுபவர்களிலிருந்து துவங்குகிறது. பின்னர் புலம் பெயர்ந்தோர் விவகாரத்தில் நிகழ்ந்தது போல் துன்பத்திற்கும் வன்முறைக்கும் பதிலளிக்க இயலாது என்று நாம் நினைக்கும் அளவு இயல்பானதாக்கி, அது படிப்படியாகக் கூட்டுச் சிந்தனை முறையாக இறுக்குகிறது.

உலகிலேயே அதிக விலையில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் இந்தியா – முதலாளிகளின் நலன் காக்கிறதா மத்திய அரசு?

இன்று,  மருத்துவமனைகளுக்கும், படுக்கைக்களுக்கும், ஆக்ஸிஜனுக்கும் மக்கள் அல்லாடும்போது ஒரு மந்தமான உணர்வும் மற்றும் ஒரு உணர்ச்சியற்ற நிலையும் நிலவுகிறது. ஒரு வகையில், வேதனையும், இறப்பும் தவிர்க்க முடியாதவை என்று நம் ஆழ்மனதில் ஏற்றுக் கொண்டு விட்டோம்.

சுயநலமிக்க மிகச்சிறிய சிறுபான்மையினரிடமிருக்கும் இந்த உணர்வைப் பெரும்பான்மையினரின் உணர்வாக முன் வைக்கின்றனர். இந்த உலகப் பார்வையில் பெரும்  அளவிலான சமூகப் பிரிவினர் முதலீடு செய்யலாம். ஆனால் மிகச்சிறிய தீவிர கூறுகள்தான் இதன் மையக் கருவாக இருப்பார்கள். இது எளியவர்களை ஆதரிப்பதன் மூலம் பெரும்பான்மையாக காட்ட தன்னை விரிவு படுத்திக் கொள்கிறது. நிறுவனங்களின் சீர்குலைவிற்கு இது ஓரளவு விளக்கமாகும். இதற்கு அவர்கள் இந்த வழிக்கு வந்து விட்டது மட்டுமல்ல, இந்த வழிக்கு வந்தவர்கள் பெரும்பாலும் எளியவர்கள் என்பதும்தான் காரணம். அது அதிகாரவர்க்கமாக இருந்தாலும் சரி நீதித்துறையாக இருந்தாலும் சரி. இத்துடன், அச்சத்தினாலும், முறை மீறி  பயன்களை எடுத்துக் கொள்ளும் கலாச்சாரமும், தனது பொறுப்பை அடுத்தவர் மீது சுமத்தி விடுவதும், திறமையற்ற, பொறுப்பற்ற தன்மைகளைக் கொண்ட   நிறுவன செயல்பாடுகளை உருவாக்குகிறது. இதைத்தான் நாம் மீண்டும் இந்த நோய்த் தொற்றை எதிர்கொள்வதில் கண்முன் காண்கிறோம்.

கடைசி தீர்வு ஊரடங்கு என்று அறிவுரை கூறும் பிரதமரே; முதல் தீர்வான தடுப்பூசியை முதலில் முறையாகச் செயல்படுத்துங்கள்- சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

நமக்குப் பொறுப்புக்களைத் தாமாக முன்வந்து விருப்பத்துடன் எடுத்துக் கொள்ளும் நபர்கள் வேண்டும். ஆனால் கொள்ளை அடிக்கும் கலாச்சாரத்துடன், தண்டனையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் சூழ்நிலையில், யாரும் பார்வையில் படுவதை விரும்புவதில்லை‌. யாராவது ஒருவர் இதிலிருந்து விலகி நல்ல வேலைகளைச் செய்ய முன்வந்தால் அவர்கள் பலன்களை எடுத்துக் கொள்பவர்களாகவும் தலைவருக்குப் பாதுகாப்பற்றத் தன்மையை உருவாக்குபவராகவும் பார்க்கப்படுவார்.

இது அமைச்சரவை செயல்பாடுகளிலும், பிற அனைத்து நிறுவனங்களிலும் கண்கூடாகக் தெரிகிறது. இங்கு அதிகாரத்தைப் பரவலாக்குவது என்பது பெரும்பாலும் வாய்ப்பில்லாத ஒன்று. பணிகள் நடக்கும் போது மோடி அதற்கான பெருமையை எடுத்துக் கொள்கிறார். அவை நிலைகுலையும் போது- ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி விநியோகத்தில் நாம் காண்பது போல- அவர் ‘அதிகாரத்தை பரவலாக்கி’ மாநில அரசுகளை பொறுப்பாக்கி விடுகிறார்.

இந்தியத் தடுப்பூசியான கோவிஷில்ட் தயாரிப்பிற்கு மூலப்பொருட்கள் வழங்கத்தடை – அமெரிக்கா அரசு அறிவிப்பு

வேறுபடுத்தல் (Othering) மற்றும் பொய்யான விவரிப்புகள்

ஆதிக்கக் குழுக்களில் தனது மேன்மையை நிருபிப்பது என்பதை ஒரு விதிமுறையாக மேற்கொள்வதும், மேலும் ‘வேறுபடுத்தி காட்டுபவர்களை’ (முஸ்லீம்கள் போன்றவர்களை) தாழ்ந்தவர்களாகக் காட்டுவது, பலவீனமானவர்களாக, தாழ்ந்தவர்களாக கருதுபவர்களை கட்டாயமாக விரும்பாததும், வெறுக்கவும் செய்வது அதன் இன்னொரு கூறாகும். எளியவர்கள் மீது வெறுப்பு என்பதே பெரும்பான்மை மனநிலையின் மையக் கூறு ஆகும். அது சலுகைகளை  முறை மீறி எடுத்துக் கொள்வது மட்டுமில்லாமல், தான் அவ்வாறு செய்வது “பட்ட காயத்திற்கு அவமானப்படுத்துவது” என்ற கருத்தை நிரூபிப்பதற்காகவே என்பதை உணர்த்துவதற்கும்  விரும்புகிறது. இவ்வாறு செய்வதன் மூலம், கண்டிப்பாக அதற்கு எங்கே கோட்டைக் கிழிப்பது எனத் தெரிவதில்லை, எந்த ஒரு திரும்பப் பெறுதலும் அல்லது மிதவாதப் போக்கும் பலவீனமாகவோ அல்லது சமரசமாகவோ பார்க்கப்படுகிறது. இது கும்பமேளாவை வெற்றிக் கொண்டாட்டமாக அனுமதித்ததில், தப்ளிக்காரர்கள் பழி சுமத்தப்பட்டு முஸ்லீம் அமைப்புகள் அனுமதிக்கப்படாததும் ஒளிந்திருக்கிறது.

கற்பனையான மேன்மையை பெருமைப்படுத்துவது, “பெரும்பான்மைவாதத்தை  தற்கொலைக்குத்” தள்ளுவதில் போய் முடிந்தது. அதனால்தான் கும்பமேளாவில் 1,700 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதும், மேலும் தரவுகளைக் கோருவது இந்து விரோதமாக திரிக்கப்பட்டது. தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதை கொண்டாட்டத்திற்கான காரணமாக கூறுவது முரண்பாடான ஒன்றாகும். இந்த மனநிலை பொய்யானத் தகவல்களைப் பரப்புவதை அடிப்படையாகக் கொண்டதும் மற்றும் துல்லியமாக தாங்களே செய்ததற்கு அடுத்தவர்களைக் குற்றம் சாட்டுவதும் ஆகும்.

மூச்சு விட தவிக்கும் இந்தியாவைக் காப்பாற்றுங்கள்: பாகிஸ்தான் மக்கள் பிரதமர் இம்ரான் கானிடம் வேண்டுகோள்

இவ்வகையான  தவறாகக் கையாள்வது மற்றும் சூழ்ச்சிகள் தற்செயலானவை அல்ல. பெரும்பான்மைவாத மனநிலைக்கு இது ஒரு கட்டாயத் தேவையாகும்.

உயர்ந்தவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்பவர்களுக்கு மற்றவர்களைத் தவறு சொல்வது, அவர்களுக்குப் பாதுகாப்புத் தருவதுடன், ஆபத்தில்(பழியில்) உதவியும் செய்கிறது. பொய்யானத் தகவல்களைப் பரப்புவதும், மற்றவர்களைக் குறை சொல்வதும் பயனுள்ள போர்தந்திரமாகவும், அறிவாளித்தனமாகவும் மற்றும் பிறப்பினால் பெற்ற மேன்மையாகவும் பார்க்கப்படுகிறது.

நாம் புள்ளி விவரங்களைச் சேதப்படுத்துவதை, குறிப்பாக தற்போதுள்ள ஆட்சியின் துவக்ககாலத்திலிருந்தே பொருளாதார செயல்பாடு குறித்த புள்ளி விவரங்களை சேதப்படுத்துவதை கண்டிருக்கிறோம். ஒருவர் என்ன செய்கிறார் என்பதற்காக மற்றவர்களை குறை சொல்லும்  தனிச்சிறப்பான  ‘கலையை’யும் நாம் கண்டிருக்கிறோம். தில்லி கலவரம் பற்றி எடுத்துக் கொண்டால் யார் கலவரத்தில் ஈடுபடாமலிருக்குமாறு  தடுத்தார்களோ, யாரெல்லாம் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டார்களோ அவர்கள் வன்முறையை திட்டமிட்ட குற்றவாளிகளாக ” கண்டுபிடிக்கப்”பட்டார்கள். உண்மையில் குழந்தைகளுக்கு ஆக்சிஜனுக்காக அவதிப்பட்ட மருத்துவரையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். தவறான விவரிப்புகளை உருவாக்குவது, மற்றவர்களை தன்னிச்சையாக குற்றவாளிகளாகக் காட்டுவதும், தீர்மானிப்பதும் தற்போது “நவீன கால சாணக்கிய” கலையாகப் பெருமையாக கூறப்படுகிறது. வேட்டையாடுதல், அரசாங்கங்களை கவிழ்த்தல், அண்மையில் தடயவியல் அறிஞர்கள் பீமா கர்கோயன் வழக்கில் நிருபித்து போல ஆதாரங்களை புகுத்துவது ஆகியவற்றில் இதனை நாம் பார்த்தோம். இவையாவும் தொற்று நோய் நெருக்கடியை எதிர்த்துப் போரிடுவதில் இன்று நமக்கு இடையூறாக உள்ளன. உயிரிழப்புகள் எண்ணிக்கை மற்றும் ஆக்சிஜன் விநியோகம் குறித்து பயனுள்ள தகவல்கள் நம்மிடம் இல்லை. தடுப்பூசிகள் கையிருப்பு தீர்ந்து போகும் நிலையில் மோடி ” தடுப்பூசிகள் திருவிழாவை (Tika Utsav)” அறிவிக்கிறார்.

புதிதாக வரத்து இல்லாதபோது, கையிருப்புகள் தீர்ந்து வரும் நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு தாராள மனதுடன் அனைவருக்கும் தடுப்பூசி போடலாம் என அனுமதித்துள்ள போது மாநில அரசுகள் அதை நிறைவேற்றவில்லை என குறை கூறலாம். இதில் இன்றைய முரண்பாடு என்னவென்றால், இந்த அறிவிப்பைப் பெரும்பான்மையோரின் மனநிலை என முன்பு அனுமதித்தவர்கள், இப்போது தாங்களே அதை அடையும் இடத்தில் இருக்கும் போது அதனை எதிர்க்கவோ அல்லது தடுக்கவோ முடியவில்லை. அவர்கள் இதில் உள்ள பாதுகாப்பற்ற மற்றும் வேதனைகளின் இயல்பை ஒப்புக்கொள்ளக் கூட அவர்களால் இப்போது இயலவில்லை. இதைவிட மோசமாக, தற்போது யாரை குறை சொல்வது என்பதே தெரியாமல் இருக்கிறார்கள் அல்லது  நிலைமை அந்த அளவு மோசமடையவில்லை என்றும் விரைவில் நிலைமை சீராகி விடும் என்றும் ஒரு கற்மாயத் தோற்றத்தை முன்வைக்கிறார்கள்.

”உங்கள் முகத்தைத் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சியில் காட்டுவதால் கொரோனா ஒழியாது” – பிரதமர் மோடிக்கு சித்தராமையா கண்டனம்

கோப உணர்வை வெளிப்படுத்தி, நியாயமான சட்டவிரோதங்களை ஆதரித்த பெரும்பான்மையினர், இன்று அதிருப்தியின் இயல்பை வெளிப்படுத்த ஒரு மொழியை திருடி உள்ளனர். குருட்டு வாய்ப்பில் தலைவரே மீண்டும் ஒரே நம்பிக்கையாக மாறி விட்டார். மேலானத் தலைவர் மேலும் ஒழுங்கையும், ஆதரவையும் கொண்டு வர பாதுகாப்பின்மை மற்றும் எளிதில் பாதிப்பிற்கு ஆளாகும் நிலையில் துளையிட்டு ஊடுருவும் எந்த ஒரு வாய்ப்பையும் விட்டு விடுவதில்லை.

பெரும்பான்மை மனநிலை ஒரு நச்சுச்சுழலை உருவாக்குகிறது. இது இந்த நோய் தொற்று நெருக்கடி நேரத்தில் ஒரு முழுச் சுற்று வந்து விட்டது. இதில் போரிடுவதில் ஏற்பட்டுள்ள  தோல்வி வியப்பிற்குரியதோ, கோபத்திற்கான எந்த ஒரு காரணமோ அல்ல.

 

www.thewire.in இணைய தளத்தில் அஜய் குடாவர்த்தி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்