Aran Sei

ஏழைகளின் உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும் – தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோரா இரண்டாம் அலை பரவிப் பெரும் உயிர் சேதங்களை விளைவித்து வரும் சூழலில், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுபேற்க உள்ள ஸ்டாலின் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் பெறகூடாது என்று  தனியார் மருத்துவமனைகளுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ”கொரோனாவை பரவலைத் தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் (மே- 6) செயல்பாட்டுக்கு வருகின்றன என்று தெரிவித்த அவர்,  உடனடியாக கட்டளை மையம் (war room) ஒன்றைத் திறக்கத் தலைமைச் செயலாளரிடம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உச்சம் தொடும் மாடுகளின் மீதான கரிசனம்: மாடுகளுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ஆக்சிசன் தேவை – இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு ஆகியவற்றை தெரிந்து ஒருங்கிணைந்து செயல்பட இந்த மையம் உதவியாக இருக்கும் என்றும்  முன்களப் பணியாளர்களின் பங்களிப்பு மாபெரும் மக்கள் சேவையாக மாறிவிட்டது என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.

மருத்துவ அவசர நிலை காலம் என்பதால் 50 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வரும் தனியார் மருத்துவமனைகள் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்வதாக தெரிவித்த அவர், கட்டணத்தில் முடிந்தளவு சலுகைகளைக் காட்டுமாறும்,  ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த கருணை காட்டி உயிரைச் செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்

இது கடினமான காலம் ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்