Aran Sei

மக்கள்தொகை அடிப்படையில் உள்ளாட்சியில் 20 விழுக்காடு தனித்தொகுதி வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

உள்ளாட்சி அமைப்பின் தலைவர் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்யவேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில், “கடந்த அதிமுக ஆட்சியில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்கும் வகையில் சட்டமியற்றப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு புறம்பானது” என்று  கூறியுள்ளார்.

மேலும், மறைமுகத் தேர்தல் நடைபெறுவதால் உறுப்பினர்களைக் கடத்துவது அல்லது பணம் வழங்குவது போன்ற முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நேர்மையாக பணி செய்ய முடியாத சூழல் உண்டாகும் என்றும் குறிபிட்டுள்ளார்.

எனவே, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யவேண்டுமென திருமாவளவன் கோரியுள்ளார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கானத் தனித்தொகுதி ஒதுக்கும் போது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி மக்கள் தொகை அடிப்படையில் பட்டியிலின மக்களுக்கு 20 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டுமெனவும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாடு முதலமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்