Aran Sei

‘பாகிஸ்தானின் வெற்றிக்காக இந்தியாவில் பட்டாசு வெடித்தவர்களின் மரபனு இந்தியராக இருக்க முடியாது’ – ஹரியானா அமைச்சர்

துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்தது.

இந்தத் தோல்வியைத் தாங்க முடியாத ரசிகர்கள், நேற்றைய ஆட்டத்தில் மோசமாகப் பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக சமூக ஊடங்களில் விமர்சித்தனர்.

சீமான் கடிதத்திற்கு குடியுரிமையா? – ஸ்விட்சர்லாந்து அரசு விளக்கம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், இர்பான் ப்தான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் குறித்துப் பேசிய ஹரியானா அமைச்சர் அணில் விஜ்” பாகிஸ்தானின் வெற்றிக்காக இந்தியாவில் பட்டாசு வெடித்தவர்களின் மரபனு இந்தியராக இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்