Aran Sei

‘விவசாயிகளுக்கு எதிரான சட்டம் முறியடிக்கப்பட்டு; சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது’ – சோனியா காந்தி

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம் முறியடிக்கப்பட்டு, சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ ஒரு வருட காலமாக ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் போராடி வந்தனர். நேற்று சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

விசாயிகளின் போராட்டம் – ஓராண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றது குறித்து பேசிய சோனியா காந்தி, “விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் தோற்று, விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளார்” என்று கூறிய அவர், கிட்டத்தட்ட 12 மாத காந்தியப் போராட்டத்திற்குப் பிறகு, 62 கோடி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கும் மன உறுதிக்கும் கிடைத்த வெற்றி என்றும்  700க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களின் தியாகத்திற்கு இன்று பலன் கிடைத்துள்ளது என்றும் இன்று உண்மை, நீதி மற்றும் அகிம்சை வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம் முறியடிக்கப்பட்டு, சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘வேளாண் சட்டங்களைப் போன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் திரும்ப பெறுக’- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

ஜனநாயகத்தில், எந்தவொரு முடிவையும் அனைவருடனும் விவாதித்து, பாதிக்கப்பட்ட அனைவரின் சம்மதத்துடன், எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே எடுக்கப்பட வேண்டும். மோடி அரசாங்கம் எதிர்காலத்திற்காக சில பாடங்களையாவது கற்றுக்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

 

Source: NDTV

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்