பாபர் மசூதியில் தொடங்கிய வெறுப்பு அரசியலின் தொடர்ச்சியே கியான் வாபி மசூதி விவகாரம் என்று மக்களவை உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கு அறிக்கையில், பாபர் மசூதி விவகாரத்தில் இழைக்கப்பட்ட அநீதியின் சுவடுகளே இன்னும் ஆறாத நிலையில் அடுத்த வெறுப்பு அரசியலின் தொடர்ச்சியாக கியான் வாபி மசூதி விவாகரத்தை கையில் எடுத்திருக்கிறது சங்பரிவாரம்.
நீதிமன்றத்தில் சட்டத்தின் அடிப்படையில் நீதியை வழங்கி நீதிமன்றங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டும்.
தாஜ்மஹாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை: இந்தியத் தொல்லியல் துறை தகவல்
சிறுபான்மை மக்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
வழிபாட்டுத் தளங்கள் நாடு சுதந்திரமடைந்த ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்ததைப் போலவே பாதுகாக்கப்பட வேண்டும், எந்த மதப் பிரிவின் புனிதத்தையும், நம்பிக்கையையும் யாரும் மாற்றியமைக்கக் கூடாது என்கிறது வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991.
கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 ஐ மீரும் நடவடிக்கை.
அரசியல் ஆதாயத்திற்காக மதவாத அரசியலை கையிலெடுத்து சிறுபான்மை மக்களை ஒடுக்கும் வழிமுறை கடும் கண்டனத்துக்குரியது.
பாசிசவாதிகள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததிலிருந்து நாட்டின் வளர்ச்சி குறித்து எந்தவித அக்கறையும் இல்லாமல் அவர்களது ஆட்சியை தக்க வைப்பதற்கு பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாட்டை உயர்த்தும் வண்ணம் மதவாதத்தை கையிலெடுத்து மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். வெறுப்பு அரசியல் வரலாற்றில் எங்கும் நிலைத்ததில்லை, கியான் வாபி மசூதி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து ஜனநாயக சக்திகளும், நல்லிணக்கத்தை போற்றும் அனைத்து தொப்புள் கொடி உறவுகளும் இணைந்து மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
நாட்டின் அமைதியை நிலைநாட்டும் வண்ணம், நல்லிணக்கத்தை உயர்த்தி, வெறுப்பு அரசியல் மாய்க்கப்பட இணைந்து போராடுவோம் என்று மக்களவை உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.
Gyanvapi Shivling Found – Justice Hari Paranthaman Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.