Aran Sei

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: பண்டிட்களை விட பன்மடங்கு பாதிக்கப்பட்டது இஸ்லாமியர்கள்தான் – காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் கருத்து

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ஒரு கற்பனையான படைப்பு. காஷ்மீரில் பண்டிட்களை விட இஸ்லாமியர்கள்தான் 50 மடங்கு அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர் என்று காஷ்மீர் மக்கள் மாநாட்டுத் தலைவர் சஜ்ஜத் லோன் தெரிவித்துள்ளார்.

மதவெறியை தூண்டும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை அரசியல் லாபத்திற்காக விளம்பரப்படுத்தும் பாஜக – சந்திரசேகர் ராவ் விமர்சனம்

“காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. காஷ்மீரில் உள்ள பண்டிட்களை விட இஸ்லாமியர்கள் 50 மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனது தந்தையை கூட அப்போது நான் பறிகொடுத்துள்ளேன்” என்று சஜ்ஜத் லோன் கூறியுள்ளார்.

1990 களில் காஷ்மீரி பண்டிட்களைப் போலவே இஸ்லாமியர்களும் ஆதரவற்றவர்களாக இருந்தனர். ஆனால் தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் முக்கிய நோக்கம் பண்டிட்களின் வலியைக் காட்டுவதை விட பல்வேறு சமூகங்களுக்கு இடையே வெறுப்பை விதைப்பதாகவே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களை தவறாக வழிநடத்தும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பிரதமரே விளம்பரப்படுத்தலாமா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

விவேக் அக்னிஹோத்ரியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன். விவேக் அக்னிஹோத்ரி, அனுபம் கெர் ஆகியோரை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பவில்லை என்றால் அவர்கள் இந்த நாட்டில் வெறுப்பைப் பரப்பி கொண்டிருப்பார்கள் என்று காஷ்மீர் மக்கள் மாநாட்டுத் தலைவர் சஜ்ஜத் லோன் தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்