’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் காஷ்மீரின் அரசியல் சூழ்நிலையை தவறாக சித்தரிக்கிறது என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
”படத்தின் தயாரிப்பாளர்களுக்கு காஷ்மீர் பண்டிட்கள் மீண்டும் காஷ்மீருக்கு திரும்ப வேண்டும் என்பதில் விருப்பம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மாறாக, அவர்கள் எப்போதும் காஷ்மீருக்கு வெளியே இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்” என அவர் கூறியுள்ளார்.
”தயாரிப்பாளர்களிடம் நான் முதலில் ஒரு விசயத்தைக் கேட்க விரும்புகிறேன். இது ஒரு ஆவணப்படமா? அல்லது வணிகத் திரைப்படமா? இது ஒரு ஆவணப்படம் என்றால், அதில் உண்மை இருப்பதாக நாங்கள் நம்புவோம். ஆனால், அவர்களோ இது ஆவணப்படம் அல்ல. ஆனால், இது யதார்த்தை அடிப்படையாக கொண்டது என கூறுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்
”தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பண்டிட்கள் வெளியேறியபோது இருந்த சூழ்நிலையை தவறாக சித்தரிக்கிறது. உண்மை என்னவென்றால் வெளியேற்றம் நடந்தபோது பரூக் அப்துல்லா முதலமைச்சராக இல்லை. கவர்னர் ராஜ் மற்றும் ஜக்மோகன் மல்ஹோத்ரா ஆளுநர்களாக இருந்தபோது தான் வெளியேற்றம் நடைபெற்றது. அப்போது பாஜக ஆதரவில் வி.பி. சிங் பிரதமராக இருந்தார்” என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
”வெளியேற்றம் நடைபெற்றபோது ஒன்றியத்தில் பாஜக ஆதரவிலான வி.பி.சிங் ஆட்சி இருந்தது என்பதை ஏன் படத்தில் காட்டவில்லை. இவ்வாறு திசைத் திருப்புவது சரியில்லை. காஷ்மீரில் எந்த ஒரு சமூகமும் தனித்து விடப்படவில்லை. பண்டிட்கள் கொல்லப்பட்டதற்கு மிகவும் வருந்துகிறோம். அவ்வாறு நடைபெற்றிருக்க கூடாது. ஆனால், காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அல்லது சீக்கியர்கள் கொல்லப்படவில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் வழியே பிரிவினையைத் தூண்டும் பாஜக – மெகபூபா முப்தி விமர்சனம்
“அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. சில இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் கூட வீடுகளையும் காஷ்மீரையும் விட்டு வெளியேறினர், அவர்களும் பண்டிட்களை போல மீண்டும் காஷ்மீருக்கு திரும்பவில்லை” என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.