Aran Sei

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வன்முறையைப் புனிதப்படுத்துகிறது – சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கருத்து

Credit: The Indian Express

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வன்முறையை வன்முறையைப் புனிதப்படுத்துகிறது  என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து திரைப்படத்தை பார்த்த பின்பு அவர் இதனை கூறியுள்ளார்.

திரைப்படம் பாதி உண்மையை மட்டுமே காட்டுகிறது. அதில் கூட காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவாக பாஜக அரசு ஒன்றும் செய்யவில்லை என்பது தெளிவாகிறதுஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சட்டமன்றத்தில், “காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவிடாமல் ஆளும் காங்கிரஸ் அரசு பேச்சுரிமையை முடக்குவதாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் பூபேஷ் பாகேல், படத்தை பார்க்காம அது குறித்து கருத்து கூற முடியாது என தெரிவித்திருந்தார். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அவருடன் படம் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

காங்கிரஸ் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், ஊடகவியலாளர் ராய்ப்பூரில் உள்ள திரையரங்கில் நேற்று இரவு 8 மணிக்கு திரைப்படத்தைப் பார்த்தனர்.” இந்த படத்தின் தெளிவான செய்தி எதுவும் இல்லை, இருப்பினும் முக்கிய கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. மதத்தை வைத்து வன்முறை அல்லது அரசியல் மட்டுமே செய்யப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு மதம் இல்லைஎன கூறியுள்ளார்.

1990 களில் பண்டிட்களில் வெளியேற்றம் நடைபெற்றது. அப்போதைய அரசுக்கு ஆதரவளித்த பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை அடிப்படையாக கொண்டு காஷ்மீர் ஃபைல்ஸ் எடுக்கப்பட்டுள்ளது. பாஜக அரசியல்வாதிகள் தோல்வியை திரைப்படம் காட்டுகிறதுஎன அவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் ஜெய் ஸ்ரீராம் முழக்கமும் ஆம் ஆத்மியின் ராம ராஜ்யமும் – நந்தா

அப்போது ஆட்சியில் இருந்த வி.பி. சிங் அரசு வேடிக்கை மட்டுமே பார்த்தது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜக்மோகன் மல்கோத்ரா அந்த பகுதியின் துணை நிலை ஆளுநராக இருந்தார். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகும் பண்டிட்கள் வெளியேற்றம் நிறுத்தப்படவில்லை. மாறாக, அவர்கள் வெளியேற ஊக்குவிக்கப்பட்டனர். காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி போரட்டம் நடத்தி, நாடாளுமன்றத்தை முடக்கிய பிறகே நிலைமையை கையாள ராணுவம் அனுப்பப்பட்டது.” என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். 

Source: The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்