Aran Sei

தி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம்: இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தால் காஷ்மீர் மாணவர்கள் பாதிப்படைவார்கள் – உமர் அப்துல்லா

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் காஷ்மீர் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதால், இந்தியா முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்கள் குறிவைக்கப்படலாம் என்று ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் வழியே பிரிவினையைத் தூண்டும் பாஜக – மெகபூபா முப்தி விமர்சனம்

1990 காலகட்டத்தில் காஷ்மீரில் பண்டிட்டுகள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இப்போது புறப்பட்டு வரும் வெறுப்பு பிரச்சாரத்தால், 1990 காலகட்டத்தில் பிறக்காத 20 வயதிற்குட்பட்ட பல காஷ்மீர் மாணவர்கள் பாதிக்கப்படலாம் என்று நான் அஞ்சுகிறேன். இதனை 1990 ஆம் ஆண்டு ஆயுதம் ஏந்தியவர்களால் கொல்லப்பட்ட தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான முகமது இடூவின் நினைவு நாளில் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் பல பொய்கள் சொல்லப்பட்டுள்ளன. 1990 காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் ஆட்சியில் இருந்தது தேசிய மாநாட்டுக் கட்சி என்று தவறாகக் காட்டப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் ஆளுநர் ஆட்சிதான் இங்கு இருந்தது. ஒன்றியத்தில், வி.பி சிங் தலைமையிலான பாஜக ஆதரவு அரசு தான் இருந்தது என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்