Aran Sei

நீட் தேர்வு எழுதிய அரியலூரைச் சேர்ந்த மாணவி –  தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை

நீட் தேர்வு எழுதிய அரியலூரைச் சேர்ந்த மாணவி –  தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலைட் தேர்வு எழுதிய அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி – ஜெயலட்சுமி தம்பதியின் இளைய மகள் கனிமொழி. இவர் நாமக்கலில் உள்ள கீரீன் கார்டன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார்.

நேற்று முன்தினம் (செப்டம்பர் 12) நடைபெற்ற நீட் தேர்வைத் தஞ்சையில் உள்ள தாமரை இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் எழுதியுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை மாணவி கனிமொழி, துளாரங்குறிச்சி விட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வின் தோல்வி பயம் காரணமாக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மாணவி கனிமொழி 12 ஆம் வகுப்பில் 562.28 மதிப்பெண்களுடன் 93 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு பயத்தால், தேர்வு எழுதயிருந்த சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் கடந்த ஞாயிற்றுகிழமை (செப்டம்பர் 12) உயிரிழந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா ஒன்று நேற்று (செப்டம்பர் 13) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Source : Puthiyathalaimurai.com

தொடர்புடைய செய்திகள் : 

நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை – எப்போது ஓயும் இந்த மரண ஓலம்

‘மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?’ – எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி

‘நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்குகிறது’ – முதலமைச்சர் ஸ்டாலின்

ஓர் உயிரை இழந்த பிறகு நீட்டுக்கு எதிராக நாளைத் தீர்மானம் நிறைவேற்றப் போகிறீர்களா? – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா – தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா – முதலமைச்சர் ஸ்டாலின் உரை

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்