Aran Sei

ஒளிப்படங்கள் சொல்லும் வரலாறு : டெல்லியை உலுக்கிய நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு

இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக நகரெங்கும் கிளர்ச்சி ஏற்பட்டது.  ​​நகரின் வடகிழக்குப் பகுதி  இனவாத வன்முறையைக் கண்டது, அது பிப்ரவரியில் நகரின் மையப்பகுதியை உலுக்கியது, பலரும் இறந்தனர், காயமடைந்தனர் வீடற்றவர்கள் ஆனார்கள்.

உலகம் ஒரு புதிய வைரஸைப் பற்றி அறிந்துகொண்டிருந்தபோது, ​​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு மணிநேர இடைவெளியில்  நாடு தழுவிய அளவில் மிகக் கடுமையான ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடகு பல புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கையை நிம்மதி இழக்கச் செய்தது. இந்த வைரஸ் மாபெரும் பாதிப்பை உலகம் முழுக்க ஏற்படுத்தியது.

கொரோனா பேரிடருக்கு இடையிலும் மத்திய அரசு அவசரமாக மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்தச் சட்ட்த்தைத் திரும்ப்ப் பெற கோரி நாட்டின் விவசாயிகள் வீதிக்கு வந்து போராடினர்.  தலைநகர் டெல்லியின் எல்லைகளில் நடப்பெற்ற இப்போராட்டம் உலகின் மிகப்பெரிய போராட்டமாய் உருவெடுத்தது. 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சமூக நிகழ்வுகளின் தொகுப்பாய் இந்த ஒளிப்படங்கள் அமைகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக குடியுரிமை சட்டத்திற்கான எதிர்ப்பு சுவரொட்டியை வைத்திருக்கிறார் ஒரு பெண்.

CAA மற்றும் NRC க்கு எதிரான போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜமா மஸ்ஜித்தில் தேசியக் கொடியை வைத்திருக்கிறார்கள்.

ஷாஹீன் பாக் எதிர்ப்பு இடத்தில் அமர்ந்திருந்த மற்ற பெண்களுடன் பில்கிஸ் தாதி.

டெல்லி கலவரத்தின்போது இந்துத்துவ கும்பலால் இழிவுபடுத்தப்பட்ட மசூதியில் உள்ள இஸ்லாமிய புனித நூல்கள்.

கொரோனா வைரஸால் நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்ததன் காரணமாக நண்பகலில் வெறிச்சோடிய கொனாட் அங்காடி.

பிரதமர் நரேந்திர மோடியால் நான்கு மணிநேர இடைவெளியில் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரபிரதேசத்தில் இருந்து பீகார் நோக்கி செல்கின்றனர்.

குர்கான் மற்றும் நொய்டாவில் உள்ள ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும், பாதுகாப்பு காவலர்களை வெப்ப ஸ்கேனர்களுடன் நிறுத்தி வளாகத்திற்குள் நுழையும் மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதோதிக்கப்பட்டது.

கொரானா நோய்த்தொற்றுக்கு பலியான அலி என்ற நோயாளி புதுதில்லியில் உள்ள ஒரு சுகாதார ஊழியரால் அடக்கம் செய்யப்பட்ட காட்சி.

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

கடந்த 2020 ஆண்டு தலைநகர் டெல்லியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

நன்றி – தி வயர். https://thewire.in/

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்