Aran Sei

இஸ்லாமிய நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இந்துத்துவவாதிகள் – சமூக மோதலை உண்டாக்க முயல்வதாகச் செயல்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு

டெல்லி உத்தம் நகர் பகுதியில், வியாபாரம் செய்யும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வலது சாரி இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் 20 அன்று, டெல்லி உத்தம் நகர் பகுதியில் உள்ள பிரதான சாலையை மறித்து, அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்த இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கைகளில் மரக்கட்டைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

போலி செய்தியைப் பரப்பிய இந்துத்துவவாதிகள் : உண்மையை உடைத்த சின்மயி

மேலும், அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கத்தை எழுப்பியதாகவும், இதேபோன்று, அன்று மாலை இந்துக்களின் ஒற்றுமையைக் காட்ட சாலையின் மையத்தில் நின்று ஹனுமான் துதியைப் பாடியதாகவும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, அந்தப் போராட்டத்தின்போது, இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இஸ்லாமியர்களிடம் பொருட்கள் வாங்கக் கூடாது என்று இந்துத்துவவாதிகள் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாடத்திட்டத்தில் இந்துத்துவத்தை திணிக்கும் பாஜக’ – வைகோ கண்டனம்

இந்தச் சம்பவம்குறித்து தெரிவித்துள்ள இந்திய மக்கள் விடுதலை சங்கத்தின் நிறுவனர் அனஸ் தன்வீர், “கம்பு அல்லது இதர ஆயுதங்களோடு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைத்து போராடுவது சட்டப்படி குற்றம். இந்தப் போராட்டம் இந்திய குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகளை மீறுகிறது. மேலும், இந்து முஸ்லீம் மத்தியில் அசாதாரணமான சூழலை உருவாக்குகிறது. அதிர்யூட்டும் விதமாகக் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த பகுதியில், வியாபாரம் செய்பவர்களினாலும், ஆட்டோ ரிக்க்ஷாகளினாலும், கூடுதலாக இங்குள்ள பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுவதாலும் கூட்ட நெரிசல் நிலவுவதாகவும், ஆனால், சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் பாஜகவும் இந்துத்துவ அமைப்பினரும் சமூக ரீதியாக மோதல் போக்கை மேற்கொள்ளவதாகவும் தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்