Aran Sei

‘உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒராண்டாகியும் எழுவர் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத ஆளுநர்’ – அற்புதம்மாள் ஆதங்கம்

விடுதலை செய்யக்கோரி கடந்த கடந்த 2015 ஆண்டு டிசம்பர் அன்று பேரறிவாளன்  தாக்கல்  செய்த மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒராண்டு கடந்துள்ளதாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தக் காத்திருப்பு கவலையை, மன அழுத்தத்தைத் தருகிறது” என்றும் அவர் குறிபிட்டுள்ளார்.

ராஜீவ் கொலைவழக்கில் தண்டனைப் பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் 29 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  கடந்த 30.12.15 அன்று பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனுவில், தன்னை விடுவிக்கக் கோரியிருந்தார்.

இந்த மனுவின் மீது கடந்தாண்டு செப்டம்பர் 6 அன்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென  கூறியிருந்தது.

இந்நிலையில், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டாகியும் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளது குறித்து பேரறிவாவாளின் தாய் அற்புதம்மாள் #29YearsTooMuchGovernor என்ற  ட்விட்டர் ஹஷ்டேக்கைப் பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்

மேலும், எழுவர் விடுதலை குறித்து தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானமும் இயற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்