Aran Sei

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரி உயர்த்தப்படுகிறது – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒன்றிய அரசின் 15வது நிதி ஆணையத்தின் நிபந்தனைகளின் பெயரில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இருக்கும் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு அவற்றின் பரப்பளவிற்கு ஏற்ப சொத்து வரி உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட்டுக்கு எதிரான நடைப்பயணத்திற்கு அனுமதி மறுப்பு – தடையை மீறி கலந்து கொண்டவர்களை கைது செய்த காவல்துறை

2011 ஆண்டில் சென்னையுடன் இணைக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகள், பிற மாநகராட்சிகள், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் 600 சதுர அடிக்கு குறைவான உள்ள குடியிருப்புகளுக்கு 25 விழுக்காடும், 600 முதல் 1200 சதுர அடி வரை உள்ள குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடும், 1201 முதல் 1800 வரை உள்ள குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடு மற்றும் 1800 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 விழுக்காடும், 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடும், 1,801 சதுர அடிக்கு மேல் சொத்து வரி 150 விழுக்காடும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை: கல்லூரி கட்டணம் கட்டாததால் வகுப்பிற்கு வெளியே நிறுத்தப்பட்ட மாணவி – மன உளைச்சலால் தற்கொலை

மேலும், சென்னையின் பிரதான பகுதிகளில் இருக்கும் வணிகப் பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 150 விழுக்காடும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டிடங்களுக்கு 100 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

2011ல் சென்னையுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள வணிக பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 100 விழுக்காடும், தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 75 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்