Aran Sei

மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

த்திய அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மே 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி நிறுவனங்கள்  தங்கள் தயாரிப்புகளில் 50 விழுக்காட்டை மத்திய அரசுக்கும், மீதமிருக்கும் 50 விழுக்காட்டை மாநில அரசுகள் மற்றும் வெளி சந்தைகளில் விற்றுக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கோவீட்ஷீல்ட் தடுப்பூசியின் விலை மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் எனவும், தனியார் மருத்துவமனைக்கு 600 ரூபாய் எனவும் சீரம்  இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிர்ணயித்தது.

இந்தியத் தடுப்பூசியான கோவிஷில்ட் தயாரிப்பிற்கு மூலப்பொருட்கள் வழங்கத்தடை – அமெரிக்கா அரசு அறிவிப்பு

கொரோனா அதிகமாகப் பரவி வரும் காலத்தில், தடுப்பூசிகளின் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்கட்சி தலைவர்களும், மாநில முதலமைச்சர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேலும், விளிம்புநிலை மக்கள் பாதிக்காத வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசே தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மத்திய அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், “கோவீட்ஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசின் விலை ரூபாய் 150 ஆகவே இருக்கும். இவ்வாறு மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கு முற்றிலும் இலவசமாக  வழங்கப்படும்” என பதிவிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்