Aran Sei

’பிற மதத்தைச் சேர்ந்தவர்களை இந்துவாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்’ – தேஜஸ்வி சூர்யா

ந்து மதத்தை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இந்து மதம் மாற்றுவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவின் தேசிய தலைவரும், பெங்களூரு தெற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா, இந்துக்களை மதமாற்றம் செய்வதை நிறுத்தினால் மட்டும் போதாது, இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இந்து மதம் மாற்றுவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (25.12.2021) கிறிஸ்துமஸ் தினத்தன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தேஜஸ்வி சூர்யா கூறினார்.

பொதுமக்களை சுட்டுக் கொன்று எரித்த மியான்மர் ராணுவம் – 38 பேர் பலியானதாக தகவல்

இந்தியாவின் ஜனநாயகத்தில் அரசியல் அதிகாரத்தை மக்களின் எண்ணிக்கை தான் தீர்மானிக்கும். ஆகவே இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் மதம் மாற்றுவதுதான் இந்துக்கள் தங்களது அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு இருக்கும் ஒரே வழி என்றார் அவர்.

தற்போது இந்தியாவில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்திலிருந்து கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். ஆகவே கர்நாடகாவில் மதமாற்றத் தடைச் சட்டம், தற்போதைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்திற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.

ஆகவே கர்நாடகா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கோயிலும், மடமும், மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றுவதற்கான ஆண்டு இலக்குகளை நிர்ணயித்துச் செயல்பட வேண்டும் என்று தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்துத்துவா இல்லாமல் இந்து இருக்க முடியாது. இந்து மதத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இந்துத்துவா சித்தாந்தம் கிளர்ச்சியைப் போதிக்கின்றது, என்றார் தேஜஸ்வி சூர்யா.

இஸ்லாமியர் பகுதிக்குள் இந்துத்துவா பேரணி; இருதரப்பும் கல்வீச்சு – இஸ்லாமியர்கள் மட்டும் கைது

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தால் மட்டுமே இங்கு ஜனநாயகம் நிலைத்து வளர முடியும். ஆகவே இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று தேஜஸ்வி சூர்யா கூறினார்.

Source: the hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்