Aran Sei

மக்களுக்காக நிற்பதே மனித அறம் – உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த கால்பந்தாட்ட வீரர்

போர்ச்சுகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பின்போது, கோகோ கோலா பாட்டிலை தூர எடுத்து வைத்து, அதற்கு மாற்றாக ‘தண்ணீரை குடியுங்கள்’ என தண்ணீர் பாட்டிலை சமிக்கை காட்டிய நிகழ்வு  சில நொடிகளில் உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.எந்த அளவுக்கு என்றால், கோகோ கோலா கம்பெனியின் மதிப்பு பங்கு சந்தையில் 28000 கோடிகள் இழப்பைச் சந்திக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கால்பந்து உலகில் இதுபோல பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

2004 ஆம் ஆண்டு லண்டன் புகழ்பெற்ற செல்சி கால்பந்து அணிக்கு 24 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, மிகப்பெரிய நட்சத்திர வீரராக வலம் வந்தவர் ஐவரி கோஸ்ட் நாட்டின் கால்பந்தாட்ட வீரர் டீடீர் ட்ரோக்பா. ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டை சேர்ந்த அவருடைய நாட்டில் 2000களில் துவக்கத்திலிருந்து உள்நாட்டு போரால் நாடே துண்டாகி கிடந்தது. தெற்கு பகுதி அரசின் கட்டுப்பாட்டிலும் வடக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தது. ஐவரி கோஸ்ட் நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் ஒரே விஷயமாக இருந்தது கால்பந்து மட்டுமே.

கோகோ-கோலாவை தவிர்த்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ– ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி என உலக சுகாதார நிறுவனம் பதிவு

2005 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி தகுதி போட்டி நடைப்பெற்றது. ஐவரி கோஸ்ட் இறுதி ஆட்டத்தில் சூடான் அணியை வெற்றி கொண்டாலும் 2006 உலக கோப்பைக்கு தகுதி பெற எகிப்துக்கு எதிரான கேமரூன் அணியின் டிரா/வெற்றி தேவையானதாக இருந்தது. ஒருவழியாக கேமரூன் எகிப்துக்கு எதிரான போட்டியை டிரா செய்ய, ஐவரி கோஸ்ட் அணி கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக 2006 உலக கோப்பைக்கு விளையாடும் தகுதியைப் பெற்றது…இதை வடக்கு, தெற்கு என அனைத்து ஐவரி கோஸ்ட் பகுதி மக்களும் மிகப்பெரிய திருவிழா போல கொண்டாடினர்.

போட்டி முடிந்து டீடீர் ட்ரோக்பா மற்றும் சக அணி வீரர்கள் கேமரா முன் தோன்றி,”நாம் நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும்.பொருளாதார வளமற்ற நம்முடைய நாடு உள்நாட்டு போரில் சிக்குண்டு தவிப்பது நல்லதல்ல. உங்கள் கால்களில் நாங்கள் விழுந்து கேட்டுக் கொள்கிறோம். ஆயுதங்களை வீசி எறியுங்கள். நாம் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இருப்போம்” என காணொளி வெளியிட்டு வேண்டிக் கொண்டனர்.

வீட்டின் எதிரே குப்பையைக் கொட்டுவதை தட்டிக்கேட்ட பட்டியல் சமூகத்தினர் மீது தாக்குதல் – வன்முறையில் ஈடுபட்டவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்த காவல்துறை

அக்காணொளி ஐவரி கோஸ்ட் நாடு முழுவதும் பரப்பப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை விட கால்பந்தே முக்கியம் என்று கருதினர். 2006 உலக கோப்பை போட்டிகளின்போது ஐவரி கோஸ்ட் உள்நாட்டு போர் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்து போனது. ஆனாலும் முழுமையாக இல்லை. அந்த உலக கோப்பையில் ஐவரி கோஸ்ட் அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக தோற்று லீக்கிலே வெளியேறினாலும், செர்பியா, மான்டிநீக்ரோ அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று கௌரவமான மதிப்பைப் பெற்றது.

அதன் பிறகும் மற்றோரு சம்பவம் 2007ம் ஆண்டில் நடந்தது.  அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தெற்கு பகுதியில் மட்டுமே நட்பு போட்டிகளை விளையாடி வந்த ஐவரி கோஸ்ட் அணியைக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு பகுதியின் பௌஹேக் நகரில் மடகாஸ்கர் அணிக்கு எதிரான நட்பு போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று டீடீர் ட்ரோக்பா கேட்டுக் கொண்டார். அதேபோல் பலத்த ராணுவ பலத்துடன் அந்த நட்பு போட்டி பௌஹேக் நகரில் கிளர்ச்சி மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போட்டியில் ஐவரி கோஸ்ட் அணி 5-0 என்ற கணக்கில் மடகாஸ்கர் அணியை வீழ்த்தியது.

கோவிட் ஷீல்டு தடுப்பு மருந்து கால இடைவெளியைக் குறைக்கவேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்

போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த கிளர்ச்சியாளர்களைப் பார்த்து “ஆயுதங்களை தூக்கி எறியுங்கள்…நாம் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்” என்று வேண்டினார். அவர்களும் ஆர்ப்பரித்தார்கள். டீடீர் ட்ரோக்பா அந்த சமயத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கோப்பைகளை வென்று புகழின் உச்சத்தில் இருந்தவர். அக்கால கட்டத்தில் டீடீர் ட்ரோக்பா பற்றி ஒரு பத்திரிகையாளர் கூறும்போது,”‘ஐவாரி கோஸ்ட் மக்கள் டீடீர் ட்ரோக்பாவை கடவுளாக கருதினார்கள். அவர் ஐவாரி கோஸ்ட் நாட்டின் ஒற்றை பெருமையாக வலம் வந்தார்” என குறிப்பிட்டார்.

நட்சத்திர கால்பந்து வீரர் டீடீர் ட்ரோக்பாவால் மட்டுமே ஐவரி கோஸ்ட் நாட்டின் உள்நாட்டு போர் முடிவுக்கு வரவில்லை என்றாலும், முக்கியமான முன் முயற்சிகளை அவரும் அவருடைய சக கால்பந்து வீரர்களும் தான் மேற்கொண்டனர். அதை யாராலும் மறுக்க முடியாது. உலகின் பெரும்பான்மையான தேசங்களில் கால்பந்து வெறும் விளையாட்டாக மட்டுமே கருதப்படுவதில்லை. அதையும் தாண்டிச் சமூகத்தின் முக்கிய காரணியாவே கால்பந்து விளையாட்டு இருக்கிறது. நட்சத்திர கால்பந்து வீரர்களோ கடவுள்களுக்கு இணையாக துதிக்கப்படுகிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை

இந்தியா போன்ற நாடுகளிலும் விளையாட்டு வீரர்கள் கடவுளுக்கு இணையாகத் துதிக்கப்படுகிறார்கள். தேசிய உணர்ச்சியைத் தூண்டும் போதை வஸ்த்துவாக கிரிக்கெட் இருப்பதென்பதை ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். விவசாயிகள் போராட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், மாநிலங்களின் சுயாட்சி உரிமைகள் உள்ளிட்ட பிரச்சனைகளால், இந்தியாவுக்குள் அறிவிக்கப்படாத உள்நாட்டு போர் நடைபெற்று வருவதாக அர்சியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. இவ்வேளையில் மக்களோடு நிற்கும் ஆளுமைகளே நமக்குத் தேவை.

கட்டுரையாளர்: ஜேம்ஸ் திரமென்ஹீர்
கால்பந்தாட்ட பயிற்றுனர்.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்