பாஸ்டேக் நடைமுறையைச் சாமானியர்களும் அணுகும் வகையில் சிரமம் இல்லாமல் இருக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் – திண்டிவனம் இடையில் உள்ள ஆத்தூர் சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தக்காலம் கடந்த 2019 ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையிலும் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க கோரி திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்திருந்தார்.
‘கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை’ – .தடுப்பூசி மையங்களை மூடும் மகாராஷ்டிரா, ஒடிசா அரசு
இந்த வழக்குத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அதில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால், அவற்றைக் குறைக்க வேண்டும் என நீதிபதிகள் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிவுறுத்தினர்.
மேலும், ஃபாஸ்டேக் எடுக்கும் நடைமுறை சாமானியர்களும் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என்றும், நடைமுறையை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
சுங்க கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கைய பின்பற்ற வேண்டும் எனவும், சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை முறையாக ஏற்படுத்த வேண்டும் எனவும், வாகன நெருக்கம் இல்லாத வகையில் நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Source : Tamil Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.