Aran Sei

’மோடி பெயரை இந்தியாவுக்கு சூட்டும் நாள் வெகுவிரைவில் வரும்’ – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

credits : pti

குஜராத்தில் உள்ள அகமதாபாத் விளையாட்டரங்கத்திற்கு பிரதமர் தன் பெயரைச் சூட்டியுள்ளார்.  அவர் தனது புகைப்படங்களை கொரோனா  தடுப்பூசி சான்றிதழ்களில் பதியவைத்துள்ளார். இஸ்ரோ மூலம் தனது படத்தை விண்வெளிக்கு அனுப்பச் செய்கிறார். நாட்டுக்கு அவர் பெயரிடப்படும் ஒரு நாள் வரும்” என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி ஒன்றை நடத்தினார். மத்திய கொல்கத்தாவில் உள்ள கல்லூரி சதுக்கத்தில் தொடங்கிய பேரணி, 5 கி.மீ. தொலைவில் உள்ள டோரினா கிராஸிங்கில் முடிந்ததாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

எரிவாயு பொருட்கள் மூலம் ஈட்டிய 21 லட்சம் கோடி எங்கே? – மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

பாஜக தலைவர்கள் தேர்தல்களின்போது மட்டுமே வங்கத்திற்கு வருவார்கள், அவர்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்து விரிவுரை செய்கிறார்கள். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்களின் நிலைமை என்ன? மோடிக்கு பிடித்த குஜராத்தில் நிலைமை என்ன?என்று கேள்வி எழுப்பிய அவர், “மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, இரவு நேரத்தில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். ஆனால், நான் கேட்கிறேன். மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா இருவரும் பாஜக ஆளும் மாநிலங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும். குறிப்பாக மாதிரி மாநிலமாக இருக்கும் குஜராத்தைக் கவனிக்க வேண்டும். ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, கடந்த 2 ஆண்டுகளாக நாள்தோறும், 2 கொலைகள், 4 பலாத்காரங்கள் நடக்கின்றன என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்குள்தான் இருக்க வேண்டுமா? – 30 ஆண்டுகால தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய உச்சநீதிமன்றம் விருப்பம்

மேற்கு வங்கத் தேர்தலை, திதிக்கும்(மம்தா) பாஜகவுக்குமான  போட்டி என்று அழைத்த அவர், “294 இடங்களிலும் எனக்கும் பாஜகவுக்கும் இடையே போர் நடைபெற உள்ளது” என்று தெரிவித்த்தாக அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்