குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விதிகளை வகுக்க மக்களவைக்கு ஏப்ரல் 9 வரையும், மாநிலங்களவைக்கு ஜூலை 9 வரையும் காலநீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு சட்டம் இயற்றப்பட்டு அல்லது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு ஆறு மாதங்களுக்குள் அதற்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும்.
இதுகுறித்து மக்களவையில் தெரிவித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், கடந்த டிசம்பர் 19, 2019 அன்று மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அது ஜனவரி 10 2020 அன்று நடைமுறைக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் கடந்த ஜூன் 18 2020 க்குள் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தால் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரனோ தொற்றின் காரணமாக விதிகள் அமைக்கப்படவில்லை என அக்டோபர் 2020 அன்று ஜே.பி .நட்டா தெரிவித்திருந்ததாக தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் இயற்றுவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் வெடித்தது, இந்தியா குடியரசு அடைந்ததற்கு பின் முதல் முறையாக மதத்தின் அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் இது குறித்து தெரிவித்துள்ளதாகவும் தி வயர் செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.