Aran Sei

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான சோதனை என்பது சிறுபான்மையினருக்கு எதிரான பாஜகவின் பழிவாங்கும் அரசியல் – பேரா. அ.மார்க்ஸ் குற்றச்சாட்டு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நாடு முழுவதும் இன்று நடத்திய சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசின் சிறுபான்மையினருக்கு எதிரான பழிவாங்கும் அரசியலே ஆகும். இதனை தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) வன்மையாக கண்டிக்கின்றது என்று அமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசானது தனது பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளுக்காக அரசு ஏஜென்சிகளை தங்களின் சுய லாபத்திற்காக தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று NCHRO அமைப்பின் தேசிய பொது செயலாளர் பேராசிரியர் P.கோயா அவர்களை NIA கைது செய்தது மிகவும் கண்டனத்திற்கு உரியது; மனித உரிமைக்கு எதிரானது. அதேபோல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் NIA சோதனை நடத்தியதோடு தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளை  கைது செய்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் உட்பட மிக முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதியளித்த உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் இவ் அமைப்பின் மாநில துணைத்தலைவர் ஹாலித் முஹம்மத் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்களான ஏ.எஸ்.இஸ்மாயில், வழக்கறிஞர் முஹம்மது யூசுப் உட்பட மதுரை மாவட்ட தலைவர் PFI அபுதாஹீர், செயலாளர் ஈசாக், முன்னாள் செயலாளர்களான ஹாஜா மற்றும் இத்ரீஸ் ஆகியோரும், தேனி மண்டல செயலாளர் யாசர், கடலூர் மாவட்ட தலைவர் ஃபயாஸ் மற்றும் ராம்நாடு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் பரகத்துல்லா ஆகியோரின் வீடுகளில் அத்துமீறி சோதனையில் ஈடுபட்டதோடு அவர்கள் அனைவரையும் NIA கைது செய்துள்ளது.  இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகள் சுமார் 106 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் தேனி மற்றும் நெல்லையில் நடைபெற்று வரும் இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அறிவகம் மதரஸாக்களிலும் அத்துமீறிய சோதனை நடைபெற்றுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. சென்னையில் PFI ன் மாநில தலைமையகத்தில் தொடர்ந்து 2வது முறையாக தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. இம்முறை அலுவலகங்களில் உள்ள அலுவலக பொருள்களான கணினி, பிரிண்டர் உட்பட பல்வேறு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளது வரம்பு மீறிய செயலாகும்.

கர்நாடகா ஹிஜாப் வழக்கு – தீர்ப்பை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்

அதேபோல் மதுரையில் சோதனை என்ற பெயரில் முன்னாள் மாவட்ட செயலாளர் இத்ரீஸ் அவர்களின் வீட்டிற்குள் ஒரு பையில் NIA மற்றும் காவல் துறையினரால் கட்டு கட்டாக பணம் கொண்டுவரப்பட்டு உள்ளதை அறிந்த இத்ரீஸ் அவர்கள் அந்த பணப்பையை தன் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதை காணும் போது மிகப் பெரிய சந்தேகத்தை NIA மற்றும் காவல் துறையினரின் மேல் எழுப்புகின்றது.

மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து மிக வீரியமாக செயல்படும் மாபெரும் மக்கள் இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகும். பல்வேறு மனித உரிமை பணிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரு தேசிய அமைப்பாகும். இந்த அமைப்பின் மேல் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த சோதனையானது நடைபெற்றுள்ளதாகவே NCHRO கருதுகின்றது. எனவே, அரசு ஏஜென்சிகளை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் கைது செய்யப்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என NCHRO தமிழ்நாடு சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் என்று தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A Raja Speech on Manusmriti is 100% Correct – Dr Sharmila | A Raja Speech About Manusmriti | Shudras

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்