Aran Sei

தமிழகத்திற்கான ஆக்சிஜன் அளவு  419 மெட்ரிக் டன்னாக அதிகரிப்பு – தமிழக முதல்வர் கோரிக்கையை ஏற்று இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை

மிழகத்திற்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை 220 மெட்ரிக் டன்னில் இருந்து 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கொரோனா இரண்டாவது அலையைச் சமாளிக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒன்றிய அரசு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். அந்த வகையில் தமிழகத்திற்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.

கொரோனா பரவலை தடுக்க தகுதியான கைதிகளுக்கு ஜாமீன் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக முதலமைச்சரின் கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 220 மெட்ரின் டன் ஆக்சிஜன அளவு உயர்த்தப்பட்டு 419 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்