Aran Sei

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர் மீது வழக்கு – போராடுவதற்கு உரிமை உள்ளது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

மைதியான வழியில் போராடுவதற்கும், கருத்தை வெளியிடுவதற்கும் உரிமை உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவரின் மீது கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையைத் தள்ளுபடி செய்து இவ்வாறு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் 50% பணியாளர்களுக்கு கொரோனா- காணொளி வழியாக வழக்கை விசாரிக்க முடிவு

கடந்த 12 மார்ச் 2020 அன்று, சிறப்பு உதவி ஆய்வாளர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் அமிதியாகப் போராடிய நபரின் மீது பூதப்பாண்டி காவல்நிலையத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக முதல் தகவல் அறிக்கை பதிந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு. அந்த வழக்கில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்யுங்கள் – மத்திய அமைச்சருக்கு பிரியங்கா காந்தி கடிதம்

மேலும், இந்தியா அரசியல் சாசன பிரிவு 19 (1) (a), (b), (c) மற்றும் (d) ஆகியவற்றை மேற்கோளிட்டு அமைதியான வழியில் போராடுவதற்கும், கருத்தை வெளியிடுவதற்கும் உரிமை உள்ளதாக கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார்.

source: live law

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்