உலகெங்கும் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் மரணங்களில், மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் காலநிலைமாற்றத்தின் காரணமாக ஏற்படுவதாக நேச்சர் கிளைமேட் சேஞ்ச் இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு உலங்கெங்கிலும் 43 நாடுகளில் உள்ள 732 பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 1991 முதல் 2018 ஆண்டுவரை நடத்தப்பட்ட ஆய்வில் வெப்பநிலை உயர்வின் காரணமாக ஏற்படும் மரணத்திற்கு காலநிலை மாற்றம் முக்கியக் காரணமாகியுள்ளது.
அதிகபட்சமாக தென்அமெரிக்காவில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெப்பநிலை உயர்வின் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், அதற்கடுத்து தென் ஐரோப்பா மற்றும் தெற்காசியா போன்ற இடங்களில் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளான புயல், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவற்றைப் போன்று, வெப்ப மரணங்களும் குறிப்பிடத் தகுந்த அளவில் உயர்ந்து வருவதாகவும் அந்த ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : காலநிலைமாற்றமே காரணம் – விஞ்ஞானிகள் தகவல்
அமெரிக்காவில் வெப்பநிலை உயர்வினால் ஏற்பட்டுள்ள மரணங்களில் 35% மரணங்கள் காலநிலைமாற்றத்தால் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும், அமெரிக்காவில் உள்ள 200 நகரங்களில் வருடத்திற்கு 1100 மேற்பட்டோர் வெப்பநிலை உயர்வினால் இறந்துள்ளதாகவும் நேச்சர் கிளைமேட் சேஞ்ச் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.