Aran Sei

கோவா தேர்தலில் வெற்றிபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., க்களை பாஜகவால் இம்முறை திருட முடியாது – ப. சிதம்பரம்

டக்கவிருக்கின்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் எந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரையும்  இந்த முறை பாஜகவால் திருட முடியாது. எங்கள் வீடு பாதுகாப்பாக உள்ளது, இன்னும் வெளியே உள்ள  திருடனுக்கு மக்கள் நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுப்பார்கள் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு கோவாவின் விடுதலை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தான் தாமதமானது என்ற பிரதமர் மோடியின் கருத்து என்பது வரலாற்றைத் திரிக்கும் அவநம்பிக்கையான முயற்சியாகும். சொல்லப்போனால் அந்த சமயத்தில் கோவாவை விடுவிக்கச் சரியான நேரத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு தலையிட்டார் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்

பாஜக அல்லது காங்கிரசில் யாரையாவது ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் நம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற சிறிய கட்சிகள் பாஜக அல்லாத வாக்குகளைப் பிரித்தது விடுவதாக ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

பாஜகவுக்கு மாற்றாக ஆம் ஆத்மியோ, திரிணாமுல் காங்கிரஸோ கோவாவில்  ஆட்சி அமைக்க முடியாது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இந்த எளிய உண்மையை வாக்காளர்களுக்கு நினைவூட்டி பாஜக ஆட்சிக்கு மாற்றாகக் காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்