Aran Sei

பாஜகவால் என்னைச் சுடமுடியும், ஆனால் தொடமுடியாது- ராகுல்காந்தி

புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவை அளித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, `விவசாயத் துறையை முற்றிலுமாக மூன்று அல்லது நான்கு குறிப்பிட்ட முதலாளிகளின் கைகளுக்கு கொண்டுபோய், அவர்களுக்கு ஏகபோகப்படுத்த அதிகாரத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக’ கூறியிருக்கிறார்.

“டெல்லிக்குள் யார் நுழையலாம் என்று உத்தரவிட முடியாது” – டிராக்டர் பேரணிக்கு தடைகோரி வழக்கில் நீதிமன்றம் கருத்து

இதுகுறித்து பேசும்போது, “இந்த நாட்டில் மிகப்பெரிய வணிகம் விவசாயம்தான் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள விரும்புகிறேன். இதை ஆளும் மத்திய அரசு, இந்த வணிகத்தை முற்றிலுமாக கார்ப்பரேட்டாக மாற்ற விரும்புகிறது” என கூறியிருக்கிறார். `மூன்று விவசாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளின் நிலை’ என்ற கருத்திருக்கும் ஒரு கையேட்டை வெளியிட்டபோது இக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

விவசாய சட்டங்கள் குறித்த ஆர்டிஐ கேள்வி – பதில் சொல்லி மாட்டிக்கொண்ட மத்திய அரசு

மேலும், “இப்போது வரை, விவசாயத் துறையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் தலையீடு என்ற முதலாளித்துவம் இல்லை. இப்போது வந்திருக்கும் இச்சட்டங்கள் அதைச் செய்ய விரும்புகின்றன. மத்திய அரசு, இச்சட்டங்களை மக்கள் மீது சுமத்தி, விவசாயிகளை போராடி போராடியே சோர்வடையச் செய்து ,அவர்களை முட்டாளாக்க முடியும் என்று நம்புகிறார்கள். உண்மையில், விவசாயிகள் பிரதமரை விட புத்திசாலிகள். அதை மத்திய அரசு புரிந்துக்கொள்ள வேண்டும். புரிந்துக்கொண்டு, அமல்படுத்த நினைக்கும் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தில் இணைய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு – மேஜர் ஜெனரல் சத்பீர் சிங்

இவற்றைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா,  `காங்கிரஸ் கட்சி ஏன் சீனாவிடம் சரணடைகிறது’ என்றும், அக்கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கேட்டுள்ளார். இவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி பேசும்போது, “ஜே.பி. நட்டா என்ற நபர் முதலில் யார்? நான் அவருக்கு தொடர்ந்து பதிலளிக்க அவர் என்ன எனக்கு பேராசிரியரா? நான் யாருக்கும் எதற்கும் பயப்படவில்லை, எச்சூழலிலும் பயப்படவும் மாட்டேன். ஏனெனில் என் கரங்க்ள், அழுக்குப்படியாதவை. அவர்களால் என்னைத் தொட முடியாது. ஒருவேளை, அவர்களால் என்னை சுட முடியும், ஆனால் என்றும் என்னைத் தொட முடியாது” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்