Aran Sei

முறிந்தது பாஜக- அதிமுக கூட்டணி – தேர்தல் இடப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் முடிவு

கர்புறம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இடப்பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்த நிலையில் தனித்து போட்டியிடும் பாஜக அறிவித்துள்ளது.
இது குறித்து பேசியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் தாமரை மலர வேண்டும் என்பதால் தனித்துப் போட்டியிடுகிறது. அதிமுகவுடன் தேசிய அளவிலான கூட்டணி தொடரும்.  அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் நான் நேசிக்கும் தலைவர்கள். அதிமுகவுடனான நல்லுறவு வரும் காலத்திலும் தொடரும். திமுக ஆட்சி குறித்து மக்களிடம் வீடு வீடாக பாஜக சார்பில் பிரச்சாரம் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணி முறிவு குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்” தனித்தன்மையோடு பல தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம். அதை இந்தத் தேர்தலிலும் தொடர்வோம் என்று கூறியுள்ளார்.
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்