Aran Sei

பாஜக எம்எல்ஏக்கள் மீது புகாரளித்துள்ள பாரதிய  கிசான் யூனியன் – விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டு.

பாஜக எம்எல்ஏக்கள் நந்த் கிஷோர் குர்ஜார் மற்றும் சுனில் சர்மா மீது காசியாபாத்தின் கவுசாம்பி காவல்நிலையத்தில் ஜனவரி 29 ஆம் தேதி, பாரதிய கிசான் யூனியன் புகாரளித்திருப்பதாகத் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 28 ஆம் தேதி காசிப்பூர் எல்லைப்பகுதிக்கு தங்களது ஆதரவாளர்களுடன் வந்திருந்த எம்எல்ஏக்கள் விவசாயிகள்மீது வன்முறையைத் தூண்டியதாகப் புகாரில் கூறியிருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாத், தான் கைது செய்யப்பட்ட பிறகு, தனது ஆதரவாளர்கள் பாஜகவினரால் தாக்கப்படுவார்கள் என்று அஞ்சுவதாகவும், ”என் ஆதரவாளர்களின் கண்ணியத்திற்கு முன்னாள், என் மரியாதை இரண்டாம் பட்சம் தான்.          என் அழைப்பின் பெயரில் என் ஆதரவாளர்கள், இரண்டு மாதங்களாக இங்கு இருக்கின்றனர். அவர்களைப் பாஜகவினரால் தாக்கப்படும் வகையில், நிர்கதியாக விட்டுவிட முடியாது” எனக் கூறியதாக தி ஹிந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கு கூடுதல் பாதுகாப்பளித்த காவல்துறை

புகார் பெறபட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பான விசாரணை நடைபெற்று வருதாக இந்திராபுரம் வட்ட அலுவலர் அனுசா ஜெயின் தெரிவித்தாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (ஜனவரி 27) உள்துறை அமைச்சருக்கு, குர்ஜார் கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அதில் திகாத் உள்ளிட்ட விவசாய தலைவர்களை ”தீவிரவாதிகள்” எனக் குறிப்பிட்டதோடு, விரைவு நீதிமன்றத்தில் அவர்கள்மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்ட பின்னர், அவர்களைத் தூக்கிலிட வேண்டும் என எழுதி இருந்ததாகத் தி ஹிந்து தெரிவித்துள்ளது.

ஓபிசி தொகுப்பு இட ஒதுக்கீடு: ரோகிணி ஆணையத்திற்கு கால நீட்டிப்புக் கூடாது – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

மேலும், டெல்லி காவல்துறையினருக்கு விவசாயிகளை அப்புறப்படுத்துவது கடினமாக இருக்குமேயானால் காவல்துறையினர் எங்களை வழிநடத்தட்டும், ”நாங்கள் நாட்டின் நலனுக்காக, விவசாயிகளை 24 மணி நேரத்தில் அப்புறப்படுத்துவோம்” எனத் தெரிவித்து இருந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு எம்எல்ஏக்களும் நடந்து கொண்ட விதத்தால் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதால், எம்எல்ஏக்களிடம், விளக்கம் கேட்டக்கப்படலாமெனப் பாஜக தரப்பு தெரிவித்தாகத் தி ஹிந்து கூறியுள்ளது.

‘மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன்’ – பேரறிஞர் அண்ணா

லோனி நகராட்சி தலைவர் ரஞ்சீதா தாமா, முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், சட்டமன்ற உறுப்பினர் குர்ஜார் கட்சியின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறியுள்ளாரென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சரணடைய ராகேஷ் திகாத் தயாராக இருந்ததாகவும், போராட்ட இடத்திற்கு எம்எல்ஏ குர்ஜார் வந்தததால், திகாத் சரணடையவில்லை என்றும் விவசாயிகளை அப்புறப்படுத்தவும் முடியவில்லையெனத் தாமா எழுதியுள்ளதாகத் தி ஹிந்து கூறியுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்