விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று 05.11.2021 காலை விழுப்புரத்தில் நடைபெற்றது. தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. பழங்குடியினர் நிலை குறித்தும், இருளர் மக்கள் வாழ்நிலை மற்றும் சமூகச் சூழல் தொடர்பாகவும் தற்போது வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப் படம் குறித்து அனைவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். இத்திரைப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல், தயாரித்து நடித்துள்ள சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துகளையும் அனைவரும் தெரிவித்துக்கொண்டனர். மேலும் பழங்குடி இருளர் கல்வி மேம்பாட்டிற்காக படத்தயாரிப்பு நிறுவனம் ரூபாய் ஒரு கோடி நன்கொடை அளித்தமைக்கு பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உயர் நீதிமன்றத்தால் எல்லா இட ஒதுக்கீட்டுக்கும் ஆபத்து – ராமதாஸ் எச்சரிகை
2. பெரிதாக பலராலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பழங்குடியினர் சமூக நிலை மற்றும் வாழ்வாதாரச் சூழல் குறித்து அனைவரும் அக்கறையுடன் பேசும் சூழலை இத்திரைப்படம் உருவாக்கியுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து பழங்குடியினர் சார்பிலும் சூர்யா மற்றும் த.செ.ஞானவேல் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
3. ஜெய்பீம் எனும் இத்திரைப்படத்தை தனது பல்வேறு பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி பார்வையிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறோம். படத்தினைப் பார்வையிட்ட அடுத்த நாள், பழங்குடியினர் நிலை குறித்து கவலையுடனும், மிசா காலதில் தான் கைது செய்யப்பட்டது குறித்த தன்னுடைய சிறை அனுபவங்களையும் குறிப்பிட்டு, பழங்குடியினர் மீதான அக்கறையுடன் அறிக்கை அளித்தமைக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
குஜராத்தில் மசூதியை இடிக்க அழுத்தம் கொடுத்த பாஜகவினர் – பதவியை ராஜினாமா செய்த அதிகாரி
4. இந்நிலையில், தீப ஒளித் திருநாளான நேற்று பூஞ்சேரி கிராமத்திற்கு நேரடியாகச் சென்ற தமிழக முதல்வர் அவர்கள், குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் சாதிச் சான்றிதழ்களை வழங்கினார். அந்நிகழ்வில், “இரண்டு வார காலத்திற்குள் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு உத்திரவிட்டுள்ளாதாக” கூறியுள்ளார். சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள பழங்குடியினர் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் தமிழக முதல்வர் அவர்களின் இச்செயல்பாட்டினை பெரிதும் வரவேற்று மகிழ்கிறோம்.
5. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பினை ஏற்று, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,திருவணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பழங்குடியினருக்கும் பட்டா, வீட்டுமனை, சாதிச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து வகையிலான நலத்திட்ட உதவிகளையும் விரைந்து வழங்கி உதவிடுமாறு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகளையும் வேண்டிக் கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வில் மோசடி- தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள்
6. 1993 ஆம் ஆண்டு புதுச்சேரி போலீசாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அத்தியூர் விஜயா வாழ்க்கையை எழுத்தாளர் ஜோதிநரசிம்மன் நாவல் வடிவில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்நாவலை இம்மாத இறுதியில் விழுப்புரத்தில் வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
7. அத்தியூர் விஜயா குறித்து எழுதப்பட்டுள்ள நாவல் வெளியீட்டு விழாவில், விஜயாவின் தாயாருக்கு ரூ ஒரு லட்சம் நிதி வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.