Aran Sei

தந்தை பெரியார் பிறந்தநாள் இனி சமூகநீதி நாள் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இன்று 110விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

“இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும். யாரும் எழுத தயங்கியதை எழுதியவர்; யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார் என்று அவர்  தெரிவித்துள்ளார்.

மேலும், பெரியார் நடத்திய போராட்டங்கள் யாராலும் காப்பியடிக்க முடியாதது. தமிழருக்கு எதிரான எல்லாவற்றையும் எதிரியாக கொண்டு செயல்பட்டார் பெரியார். நாடாளுமன்றத்தின்  வாசலுக்கே போகாத பெரியாரால்தான் இந்திய அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய எழுச்சிக்கு பெரியார் போட்ட விதைதான் காரணம். தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் அடையாளமாக சமூக நீதி நாளை கொண்டாடுவோம்”  என்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “ கடவுள் நம்பிக்கை கொண்ட பாஜக இந்த அறிவிப்பை வரவேற்கிறது” என தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்